முதற்பாகம்
அலைகிவசல்லமவர்களில்லையே யென்று நினைத்து வாட்டத்தைக் கொண்ட மனசையுடையவனாயினான்.
811.
மறந்திகழ் வேலீ
ரிங்கு வந்தவ ரன்றிக் காவி
லுறைந்தவ ருளுரோ
வென்ன வுறுவினைத் துடரை நீக்கித்
துறந்தவ னுரைப்பப்
பாவம் பகையொரு தொகையாய்க் கூடிப்
பிறந்தபூ சகுலென்
றோதும் பெயரினன் பெயர்ந்துஞ் சொல்வான்.
26
(இ-ள்)
பொருந்திய பாவத்தினது தொடர்பை யொழித்து யாவுந் துறந்தவனாகிய இசுறாவென்னும் அப்பண்டிதன்
வலிமையானது பிரகாசிக்கின்ற வேற்படை தாங்கிய கையினையுடைய வியாபாரிகளே! இப்போது
இவ்விடத்தில் வந்தவர்களாகிய நீங்களல்லாமல் அந்தச் சோலையின்கண் தங்கியவர்களும் வேறே
உள்ளரோ? என்று கேட்கப் பாதகமும் பகைமையும் ஒரு கூட்டமாய்க் கூடி இப்பூமியின்கண் உற்பவித்த
அபூஜகிலென்று சொல்லும் பெயரினை யுடையவன் திரும்பவுஞ் சொல்ல ஆரம்பித்தான்.
812.
வடுக்கதிர் வேற்க
ணங்கை மனைப்பொருட் பண்ட மற்று
மடுக்கிய
துணர்ப்பைங் காவி லகுமதென் றொருவ னல்லா
லெடுக்கருந்
தவத்தின் மேலோ யாவரு மடைந்தோ மென்ன
நடுக்கமொன்
றின்றிச் சொன்னா னஞ்சுறும் வெஞ்சொ லானே.
27
(இ-ள்)
தீமை பொருந்திய கொடிய வார்த்தைகளை யுடையவனான அவ்வபூ ஜகிலென்பவன் தாங்குதற்கரிய
தவத்தையுடைய மேன்மைபெற்ற பண்டிதரே! குற்றமமைந்த பிரகாசத்தையுற்ற வேலாயுதம் போன்ற
கண்களைக் கொண்ட பெண்களையுடைய எங்கள் வீட்டின் பொருளாகிய வஸ்துவு முதலியவைகளை அடுக்கிய
பசிய பூக்களையுடைய அந்தச் சோலையின்கண் அவைகளைக் காக்கும் பொருட்டு அஹ்மதென்று சொல்லும்
ஒருவனல்லாமல் மற்ற யாவர்களும் இங்குவந்து சேர்ந்தோமென்ற யாதொரு அச்சமுமில்லாம லெடுத்துச்
சொன்னான்.
813.
தீயினுங் கொடிய
மாற்றஞ் செவிமடற் றுளையி லோடிப்
போயது சிந்தை யூடு
புகைந்திடப் புழுங்கிப் பொங்கி
வாயினீர் வறந்து
கண்ணில் வளர்தழற் கொழுந்து காட்டிக்
காய்சின வேறு
போன்றான் கவலுநூற் புலமை யோனே.
28
(இ-ள்)
அவன் அவ்வாறு எடுத்துச் சொல்லிய அக்கினியைப் பார்க்கிலும் அதிகக் கொடுமை தங்கிய
அவ்வார்த்தைகள்
|