முதற்பாகம்
நிமித்தத்தினால் நீர்ப்
பெருக்கானது வந்து அத்திருடர்களை இங்கு வரவொட்டாது தடுத்தது பாருங்களென்று ஒருவர்க்கொருவர்க்
கூறி ஆச்சரியப்பட்டு வள்ளலாகிய நபிகள் பெருமானவர்களைத் துதித்து அப்பாதையின்கண் நடந்து சென்றார்கள்.
850.
தஞ்ச மீங்கிவ ரெனப்புகழந்
தவர்தமை நோக்கி
யஞ்ச லாதுநின்
றபூசகல் மனத்தினி லழன்று
விஞ்சை யான்முகம்
மதுபடித் திவணிடை விளைத்த
வஞ்ச னைத்தொழில்
லதுவே றிலையென மறுத்தான்.
10
(இ-ள்)
அவ்வாறு இப்பாதையின்கண் நமதியாவர்களுக்கும் அடைக்கலமானவர்கள் இந்த நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் தானென்றுத் துதித்த அந்த வியாபாரிகளை அபூஜகிலென்பவன் மனசின்கண் பயமின்றி
நின்று பார்த்துக் கோபங் கொண்டு முகம்மதென்பவன் விஞ்சையினாற் கற்று இவ்விடத்தின்கண் செய்த
யாவும் மாயாசாலச் செய்கையே யல்லாமல் வேறே தெய்வாநுக்கிரகமான தியாதொன்று மில்லையென்று
சொல்லி மறுதலித்தான்.
851.
படிறு ளக்கசட்
டபூசகல் பகர்ந்திடு மொழிகேட்
டடல பூபக்கர் மனத்தடக்
கினுமடங் காதாற்
கொடிய தீவினைக்
குரியவர் சொல்லினைக் குறித்தோர்
கெடுவ ரென்பதற் கையமி
லெனக்கிளத் தினரே.
11
(இ-ள்) வஞ்சகத்தினது
மனசையுடைய கீழ்மையான அவ்வபூஜகிலென்பவன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை வீரத்தையுடைய அபூபக்கரவர்கள்
காதுகளினாற் கேள்வியுற்று அவற்றை மனசின்கண் அமையச் செய்தும் அமையாததினால் கொடுமை தங்கிய
தீய செயல்களுக்குச் சொந்தமானவர் சொல்லிய வார்த்தைகளை மனசின்கண் மதித்தவர்கள் கெட்டுப்
போவார்களென்பதற்குச் சந்தேக மில்லையென்று சொன்னார்கள்.
852.
கரிந்த புன்மனச்
சிறியவர் கழறிய கொடுஞ்சொற்
றெரிந்த மேலவர் செவிக்கிடா
ரென்னுமத் திறம்போல்
விரிந்த கார்க்குடை
நிழலிடை வரைப்புயம் விளங்க
வருத்த வப்பொருண்
முகம்மது நடந்தன ரன்றே.
12
(இ-ள்)
அப்போது தீய்ந்த கீழ்மையான மனசையுடைய சிறியோர்கள் சொல்லிய கொடிய வார்த்தைகளை எல்லாமறிந்த
மேலோர்கள் காதுகளினால் கொள்ள மாட்டார்களென்று சொல்லுமந்தத் தன்மையைப் போல அரியதவத்தினது
சம்பத்தாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பாதகனான அவ்வபூஜகிலினது வார்த்தைகளைக்
காதுகளிற் கொள்ளாது
|