முதற்பாகம்
856.
சோலை வாயொரு வானக
மெனச்சுடர் திகழக்
கோல வார்கழற் குறைசிகள்
குழுக்கண நாப்பண்
வேலை வெண்டிரை முகட்டெழு
மதியினும் வியப்ப
மாலை தாழ்புய முகம்மது
வந்துவீற் றிருந்தார்.
16
(இ-ள்)
அந்தச் சோலையினிடமானது ஒப்பற்ற விண்ணுலகத்தினது இடத்தைப் போல ஒளி பிரகாசிக்கும்படி அழகிய
நேர்மையான பாதங்களைப் பெற்ற குறைஷிகளின் கூட்டமாகிய நட்சத்திரங்களின் நடுவில் சமுத்திரத்தின்
வெள்ளிய அலைகளினது உச்சியில் எழும்பா நிற்கும் சந்திரனைப் பார்க்கிலும் அதிக அற்புதமாய்
மாலைகள் தாழப் பெற்ற தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் உதயமாகி
வீறுடனிருந்தார்கள்
|