முதற்பாகம்
(இ-ள்) அன்றியும்,
வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் வருகின்ற பாதையின் சிங்காரிப்பை
யொப்பப் புள்ளிகள் படர்ந்த வண்டுகளுடன் பசியமடல்களையும் விரிந்த சிரத்தினையுமுடைய கமுகமரங்கள்
வெண்ணிறத்தைக் கொண்ட வெள்ளியினாற் செய்த புஷ்பங்களைப் போலத் தமது பாளைகளின் வாய்களைவிண்டு
தெள்ளிய சிவந்த பொன்னினாற் செய்தவை போன்ற செழிய குலைகளைத் தாங்கி நானாபக்கங்களிலும்
நின்று பிரகாசியா நிற்கும்.
863.
விரிந்த மென்மலர்க்
கொம்பினி லளியினம் வீழச்
சரிந்து மென்றுக ளுதிர்வது
வானவர் தலத்தி
லிருந்த பொன்னெடுத்
தருநபி யிணைமல ரடியிற்
சொரிந்து விட்டது
போல்வயின் வயின்றொறுந் தோன்றும்.
7
(இ-ள்)
அன்றியும், வண்டுக் கூட்டங்கள் மலரப் பெற்ற மெல்லிய புஷ்பங்களையுடைய கொம்புகளில் விழ,
அதனால் அக்கொம்புகள் சாய்ந்து மிருதுவான மகரந்தங்களுதிர்வது, தேவர்களான மலாயிக்கத்துமார்கள்
தங்களின் ஸ்தலமாகிய சொர்க்கலோகத்தின் கண்ணிருந்து சொர்ணங்களைத் தங்களது கைகளினால்
எடுத்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அரிய தாமரை மலர்போன்ற இருபாதங்களிலும்
சொரிவதைப் போல இடங்கள் தோறும் பிரகாசியா நிற்கும்.
864.
தெறித்த முத்தொளிர்
கழனிவா னகமெனச் சிறப்பத்
தறித்த பூங்கரும்
பாட்டுசா றடுபுகை தயங்கிக்
குறித்த சோலைமேற்
றவழ்வது குரைகட லேழும்
பறித்த ருந்திய
கருமுகிற் படலமொத் துளதால்.
8
(இ-ள்)
அன்றியும் சிந்திய தரளங்கள் பிரகாசியா நிற்கும் வயல்களானவை ஆகாயத்தினிடத்தைப் போலச்
சிறக்கும்படி வெட்டிய அழகான கரும்புகளை ஆட்டுகின்ற சாற்றைக்காய்ச்சும் புகையானது மின்னிக்
குறிக்கப்பட்ட சோலையின்மீது தவழ்கின்றது, ஒலிக்குகின்ற ஏழு சமுத்திரங்களையும் பிடுங்கிச்
சாப்பிட்ட கரிய நிறத்தையுடைய மேகத்தினது படலத்தை நிகர்த்திருந்தது.
865.
பாட லத்தரு நிழன்மர
கதக்கதிர் படர
வாடி நிற்பன முகம்மதைக்
கண்டகங் களித்து
வீடின் மென்சிறைப்
பட்டகண் ணனைத்தையும் விழித்துக்
கூடி நோக்குவ தொத்தன
களிமயிற் கூட்டம்.
9
(இ-ள்)
அன்றியும் சந்தோஷத்தையுடைய மயிற் கூட்டங்கள் பாதிரிமரத்தினது நிழலின்கண் பசிய கிரணங்களானவை
|