முதற்பாகம்
சேந்திணை
பொருவா தினமென வெருவிச்
செங்கயல் வரிவராற் கெளிறு
பாய்ந்தயல் போகி வனத்திடை யொளித்துப்
பங்கமெய் படப்பயப் படுமே.
34
(இ-ள்) அன்றியும், அழகிய கூந்தலைக் கொண்ட பெண்யானைகள் மெல்லிய நடையைப் பயிலும் குடம்
போலும் முலைகளையுடைய அவ்வுழத்தியர்களின் செழிய கைகளினது காந்தட் புஷ்பத்தை நிகர்த்த
மென்மை தங்கிய விரற்களுக்கும், விஷத்தை யொத்த இரேகைகளையுடைய கண்களுக்கும், கடைதல் செய்து
இணக்கப் பெற்ற கணைக் கால்களுக்கும் இன்னம் செந்நிறமடைந்து ஒப்பா கோமென்று பயந்து
கெளிறும், சிவந்த கெண்டை மீனும், இரேகைகளையுடைய வராலும் சாடிப் பக்கத்திற் சென்ற நீரின்
கண்மறைந்து தங்களின் உடல்களானவை குற்றப்படும் வண்ணம் பயப்படாநிற்கும்.
55.
குருகின
மிரியப் புள்ளினம் பதறக்
கொக்கினம் வெருவிட வெகினம்
விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல
மென்சிறைப் பேட்டனந் துடிப்பச்
சொரிமதுத்
துளித்துக் குவளைவாய் சிதறச்
சுருட்டிவால் விசைத்திடத் துள்ளி
வரிவராற்
பகடு வளைநில வெறிக்கு
மடைத்தலைக் கிடந்துமூச் செறியும்
35
(இ-ள்) அன்றியும், இரேகைகளை யுடைய ஆண் வரால் மீனானது நாரைக் கூட்டங்கள் ஓடவும், பட்சிக்
கூட்டங்கள் பதறவும், கொக்கின் கூட்டங்கள் பயப்படவும், அன்னங்கள் விரிந்த தாமரைப்
புஷ்பங்களாகிய பாயல்களை விட்டு நீங்கவும், மெல்லிய சிறகுகளையுடைய பெட்டையன்னமானது
துடிக்கவும், சொரியுகின்ற நறவத்தைச் சிந்திக் குவளை மலர்கள் வாய் சிதறவும், தனது வாலைச்
சுருட்டிக் கொண்டு வேகமுறத் துள்ளிச் சங்குகளின் முத்துக்களினது பிரகாசத்தை வீசும் மடையின்கண்
கிடந்து மூச்செறியா நிற்கும்.
56.
வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலி
வளர்கிளைக் கிளையெனக் கிளைத்துப்
பெருகுசூன்
முதிர்ந்தீன் றாரமு துறைந்து
பிடர்குனி தரக்குலை சேந்து
சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச்
சுடர்மணி முத்தினந் தெறிப்பத்
தரையினிற்
படிந்தே யருட்கடை சுரந்த
தருவினம் வெருவிடக் கிடக்கும்
36
|