பக்கம் எண் :

சீறாப்புராணம்

35


முதற்பாகம்
 

 

(இ-ள்) அன்றியும், ஒழுங்காய் நெருங்கிய வரிசையையுடைய பசிய நெற்பயிரானது வளர்கின்ற குடும்பத்தினது கிளையைப்போலப் பெருகி அதிகரித்த சூலானது முற்றப் பெற்று ஈன்று நிறைந்த அமுதம் தங்கிப் பிடரானது குனியும் வண்ணம் குலை சிவப்புற்றுக் கிரணங்களைச் சிந்துகின்ற பல பவளங்களினது நிறத்தைச் சம்பாதித்து ஒளிவைக் கொண்ட முத்து மணியினது குவைகள் தெறிக்கும்படி பூமியினிடத்து அமைந்த காருண்ணியக் கடையானது ஓங்கிய தருவினது கூட்டங்கள் பயப்படக் கிடவாநிற்கும்.

 

     57. கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக்

             குடமதுக் கைமடுத் தருந்தி

        மைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்ட

             மள்ளர்கள் வனப்பினுக் குடைந்த

        சித்தசன் கரவாட் பறித்ததை வளைத்த

             செயலெனப் பிள்ளைவெண் பிறைவாட்

        கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்து

             கதிரரிந் தரிநிரை யிடுவார்.

37

      (இ-ள்) பூங்கொத்துகளைத் தரித்து அரையின்கண் ணுள்ள வஸ்திரத்தை இறுகச் செய்து குடத்தினது கள்ளைக்கையில் நிறைத்துக் குடித்து மேகங்களானவை தவழாநிற்கும் மகா மேரு பருவதத்தை யொத்த தோள்கள் திரளப் பெற்ற உழவர்கள் தங்களின் அழகுக்குடைந்த மன்மதனது கையின் கண்ணுள்ள வாளைப் பறித்து அதை வளையச் செய்த தொழிலைப் போலும் வெள்ளிய இளஞ் சந்திரனை நிகர்த்த அரிவாளைக் கையினிடத்துத் தாங்கி வயலின்கண் நுழைந்து கதிர்களை யறுத்து அரிகளை வரிசையாக இட்டார்கள்.

 

     58. திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்திக்

             திரைசெய்து சும்மையிற் சேர்த்துக்

        கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட்

             கடைசியர் குழாத்தொடுந் திரண்டு

        விரிந்தசெங் கமலக் கரம்பல வருந்த

             விசித்திறுக் கியசுமை யேந்திப்

        பொருந்திய வரப்பி னெறிக்கடைக் கதலிப்

             புலியடிக் குலைத்தலை சாய்க்கும்.

38

      (இ-ள்) கரு நிறத்தைக் கொண்ட பெருமை பொருந்திய கூந்தலையும் சிவந்த இரேகைகள் படர்ந்த வேலாயுதம் போலுங் கண்களையு முடைய உழத்தியர்கள் அவ்வாறு செவ்வைப்பட்ட அரிகளைக் கொடுங் கையிற் கிடத்தித் திரை செய்து சுமையிற்