பக்கம் எண் :

சீறாப்புராணம்

340


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அக்கொடிகள் சிவப்புத் தங்கிய பாதகமலங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கவியப்பெற்ற மேகங்களானவை குடையினது நிழலிடும்படி அழகிய அந்த ஷாமென்னும் பட்டணத்தின் பக்கத்தில் வருவதைப் பார்த்து வெள்ளிய சாந்தினையுடைய படிகத்தினாற் செய்யப்பட்ட உயர்ந்த மேன்மாடங்களில் நின்றுக் குவிதலைக் கொண்ட தங்களது கைகளை விரித்து அவர்களைக் கூப்பிடுவதைப் போல அசைந்தன.

 

கலிவிருத்தம்

 

876. இச்செக மதிற்றபதி யற்றொழிலி யற்றி

    விச்சையி னமைத்ததுகொ லோவமரர் விண்ணி 

    லச்சொடுபி றந்திவ ணடைந்ததுகொ றானோ

    வச்சிர மணிக்கதிர் பரப்புமணி மாடம்.

20

     (இ-ள்) அன்றியும், அந்த ஷாம் தேசத்தில் தங்கிய மாடங்களானவை இப் பூமியின்கண் கம்மாளன் தான் கற்ற கல்வித் தொழில்களனைத்தையுஞ் செய்து மாயாசலத்தினால் சமைத்து வைத்தனவோ? அல்லது தேவர்களான மலாயிக்கத்து மார்களினது ஆகாய லோகத்திலிருந்து குறிப்போடும் உதயமாகி இவ்விடத்தில் வந்து சேர்ந்தனவோ? என்று சொல்லும்படியான வயிரமணிகளினது பிரகாசத்தை எவ்விடங்களிலும் விரியும்வண்ணம் செய்ய நிற்கும் அழகு பொருந்திய மாடங்கள்.

 

877. சுந்தரந பிக்குரிசின் மெய்ப்புகழ் துலங்கி

    யந்தரமு மண்டபகி ரண்டமு நிறைந்து

    மந்தரமி தென்றுற வளைந்தற வழிந்து

    சிந்துவ தெனச்சுதை தெளித்தமணி மாடம்.

21

     (இ-ள்) அன்றியும், அம்மாடங்கள் அழகிய பெருமையிற் சிறந்தோரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மெய்மையாகிய கீர்த்தியானது எவ்விடங்களிலும் பிரகாசித்து ஆகாய லோகத்திலும் அதன் மேற்புற மிருக்கும் அண்டபகிரண்டத்திலும் பெருகி மந்தரகிரியானது இஃதென்று பொருந்தும்படி மிகவாய் வடிந்து சொரிவதைப் போல சுண்ணச் சாந்துகள் தெளித்த இரத்தினவர்க்கங்கள் அழுத்தப் பெற்ற மாடங்கள்.

 

878. எங்கணபி யிங்ஙன மெதிர்ந்தனர்கொ லென்னத்

    திங்கடவழ் சாளர விழிக்கடை திறந்து

    பொங்கழகு நோக்குவன போலுற நிவந்த

    பைங்கதிர் விரித்தொளி பரப்புமணி மாடம்.

22