பக்கம் எண் :

சீறாப்புராணம்

350


முதற்பாகம்
 

புகுதும்படியாகவும், இப்பூமியின்கண் இரத்தநீர் சிந்தி யோடும்படியாகவும், நாமனைவரும் ஒன்றுகூடி அவனோடு யுத்தம் செய்வதே சாமர்த்தியமென்று சொன்னார்கள்.

 

     907. அறைதிரைக் கடலென வதிர்தன் மாறியிங்

         குறையுமின் வேறொரு பாய சூழ்ச்சியான்

         மறைபட வரவழைத் தவன்றன் வல்லுயிர்

         குறைபட ரகசியக் கொலைசெய் வோமென்றார்.

7

     (இ-ள்) அவர்கள் அவ்விதம் சொல்லவே அவர்களில் சில பேர் மற்றவர்களைப் பார்த்து நீங்கள் ஓசை பொருந்திய அலைகளையுடைய சமுத்திரத்தைப் போல முழங்குவதை விட்டும் நீங்கி இவ்விடத்தில் தங்கியிருங்கள். அந்த முகம்மதென்பவனை வேறெயொரு தந்திர ஆலோசனையினால் மறைவாக நம்மிடத்திற்கு வரவழைத்து வலிமையுற்ற அவனது ஆவியானது குற்றமுறும் வண்ணம் அந்தரங்கமாகிய கொலை செய்வோ மென்று சொன்னார்கள்.

 

     908. சூதர்கள் கூண்டினி துரைத்த சொல்லையோர்

         பாதகன் கருத்தினுட் படுத்தி மாமறை

         வாதியென் றவனுயிர் மாய்க்க வேண்டுதற்

         கீதலா லுறுமொழி யொன்று மில்லென்றான்.

8

     (இ-ள்) அவ்வாறு காபிர்களாகிய அந்தச் சூதச்சாதியார் ஒன்று கூடி இனிமையுடன் பேசிக்கொண்ட வார்த்தைகளை அக்கூட்டத்திலுள்ள ஒரு துரோகியானவன் தனது காதுகளினாற் கேள்வியுற்று மனசினுள் ளிருக்கும்படி செய்துப் பெருமை பொருந்திய நமது வேதத்தின் வாதியென்று சொல்லிய அந்த முகம்மதென்பவனின் ஆவியை மாய்ப்பதற்குப் பொருந்திய வார்த்தை இஃதல்லாமல் வேறேயொன்றுமில்லையென்று ஓருபாயத்தைச் சொல்லினான்.

 

     909. உரைவழி யவைசெய் துபாய மாகிய

         கரைமதிக் காபிரி னால்வர் கள்ளமாய்

         நிரைமணிப் புரிசையின் வாயி னீங்கியே

         விரைசெறி முகம்மதின் விடுதி நண்ணினார்.

9

     (இ-ள்) அவ்விதம் அவன் சொல்லிய தந்திரமாகிய அவ்வார்த்தைகளுக்கு அவர்கள் யாவர்களும் சம்மதித்து அவ்வார்த்தையி னொழுங்குப் பிரகாரம் செய்ய வேண்டியவைகளைச் செய்துத் திருட்டுத்தனமாய் கரைந்து போகும் புத்தியையுடையக் காபிர்களாகிய அந்தச் சூதர்களில் நான்கு பேர்கள் இரத்தினங்களை வரிசையாக நிரைக்கப்பட்ட அந்த