பக்கம் எண் :

சீறாப்புராணம்

351


முதற்பாகம்
 

ஷாம்தேசத்தின் கோட்டை மதிலினது வாயிலைத் தாண்டி கஸ்தூரி வாசனையானது நானாபக்கங்களிலும் மிகுத்துக் கமழா நிற்கும் கரத்திரத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் விடுதியை வந்து நெருங்கினார்கள்.

 

     910. வஞ்சனை கொலைகப டனைத்து மாட்டிய

         நெஞ்சினர் மக்கிக ணிறைந்த நாப்பணிற்

         கஞ்சமென் மலர்ப்பதக் கார ணீகரை

         யஞ்சலித் தன்புட னடுத்து நின்றனர்.

10

     (இ-ள்) அவ்வாறு வந்து நெருங்கிய வஞ்சம் கொலை கபட முதலிய தீய செயல்களெல்லாவற்றையும் பூண்ட மனசை யுடையவர்களான அந்தச் சூதச் சாதியிலுள்ள நான்கு பேர்களும் திருமக்கமா நகரத்தையுடைய அவ்வியாபாரிகள் பெருகியிருக்கப்பட்ட நடுவில் தாமரைமலர் போலும் மெல்லிய பாதங்களையுடைய காரணீகரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சமீபித்து வணங்கி அன்புடனின்றார்கள்.

 

     911. ஆங்கவர் தமையழைத் தருகி ருத்திநீ

         ரீங்குறை கருமமே தெடுத்தி யம்புமென்

         றோங்கிய முகம்மது முரைப்பச் சாமிக

         டீங்குறு மனத்தினை யடக்கிச் செப்புவார்.

11

     (இ-ள்) அப்போது சகல படைப்புகளிலும் உயர்ச்சியுற்ற நபிகள் பெருமான், நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆங்கு வந்த அந்தச் சூதர்களை யழைத்துத் தங்களது பக்கத்திலிருக்கும்படி செய்து நீங்கள் இவ்விடத்தில் வந்து தங்கிய காரியம் யாது? அதை எடுத்துச் சொல்லுங்க ளென்று கேட்க, அந்த ஷாம்தேசத்திலுள்ள அவர்கள் தங்களது தீமை பொருந்திய மனதையடக்கிக் கொண்டு சொல்லுவார்கள்.

 

912. மருக்கமழ் சோலைசூழ் மக்க மாநகர்ச்

    சரக்குள தெனிலது தருக சேரலார்

    செருக்கறுத் தவருடற் சிதைத்துத் திக்கெலாம்

    பெருக்கிய கீர்த்தியீ ரென்னப் பேசினார்.

12

     (இ-ள்) சத்துராதிகளின் அகங்காரங்களெல்லாவற்றையும் அற்றுப் போகும்படி செய்து அவர்களினது சரீரத்தைச் சிதைவுபடுத்தி எண்டிசைகளிலும் பெருகச் செய்த கீர்த்தியையுடைய முகம்மதானவர்களே! உங்களிடத்தில் வாசனையானது பரிமளிக்கப் பெற்ற பூங்காவுகள் வளைந்த திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ள சரக்குகள் உண்டுமேயானால்