பக்கம் எண் :

சீறாப்புராணம்

353


முதற்பாகம்
 

916. சாமுநாட் டவருரை யனைத்துஞ் சம்மதித்

    தாமினா திருமக னகம கிழ்ச்சியாய்

    நேமிவா னவர்திரை நிறைந்து சுற்றிய

    பூமிநா யகர்தொழப் புறப்பட் டாரரோ.

16

     (இ-ள்) அப்போது அந்த ஷாம் நகரத்தை யுடையவர்களான அச்சூதச்சாதியாரின் வார்த்தைகளெல்லாவற்றையும் தெய்வீகமுற்ற ஆமினா அவர்களின் புதல்வராகிய நாயகம் நபிமுகம்மது சல்லலாலகு அலைகிவசல்ல மவர்கள் சம்மதித்து மனக்களிப்புக் கொண்டு வட்டமாகிய வானலோகத்தின் கண்ணுள்ள தேவர்களான மலாயிக்கத்துமார்களும் சமுத்திரமானது பெருகிச் சூழ்ந்த இப்பூமியின் கண்ணுள்ள அரசர்களும் வணங்கும்படித் தங்களிருப்பிடத்தை விட்டுப் புறப்பட்டார்கள்.

 

917. மக்கிகள் சிலருடன் மைச றாவுந்தன்

    பக்கலில் வரக்கதிர் பரப்பி மெய்யொளி

    திக்கினில் விரித்திடச் செறிந்த செங்கதிர்

    மிக்கபொற் புரிசையின் வாயின் மேயினார்.

17

     (இ-ள்) அவ்விதம் புறப்பட்ட நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மக்கமாநகரத்தையுடைய வியாபாரிகளிற் சில பேர்களுடன் கதீஜா நாயகமவர்களால் அனுப்பப்பட்ட மைசறாவென்பவனும் தங்களது பக்கத்தில் சூழ்ந்து வரும்படியாகவும், தங்களின் சரீரமானது கிரணங்களை எட்டுத் திக்குகளிலும் பரவச் செய்து பிரகாசத்தை விரித்திடும்படி யாகவும், நடந்து நெருங்கிய சிவந்த பிரபையானது மிகுந்த அழகிய அந்த ஷாம்தேசத்தின் கோட்டை மதிலினது வாயிலைப் போய்ப் பொருந்தினார்கள்.

 

                    அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

918. விரைநறை கமலச் செல்வி மேவுசை னயினார் பாலன்

    றரைபுக ழபுல்கா சீஞ்சீர் தருங்கொடைப் புகழே போல

    நிரைசுதை வெள்ளை தீற்றி நிலாமணி குயிற்றி வெள்ளி

    வரையென நிமிர்ந்து தோற்றி மறுவிலா தொளிரும் வாயில்.

18

     (இ-ள்) அவ்வாறு நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அந்தக் கோட்டை மதிலின் வாயிலைப் போய் பொருந்தவே, அவ்வாயிலானது தேனையுடைய வாசனை தங்கிய தாமரைமலரின்கண் வீற்றிரா நின்ற இலக்குமியானவள் விரும்பும் ஹூசைன் நயினாரவர்களின் புதல்வரான இப்பூலோக முழுவதும் புகழுகின்ற இந்நூலின் உதாரநாயகர் அபுல்காசீம் மறைக்காயரவர்கள் தராநிற்கும் சிறப்பினையுடைய கொடையினது