பக்கம் எண் :

சீறாப்புராணம்

354


முதற்பாகம்
 

கீர்த்தியைப் போல, வரிசையாகிய சுண்ணச்சாந்தினால் மெழுகிப் பிரகாசத்தையுடைய இரத்தினவர்க்கங்களைப் பதித்து வெள்ளியினாலான மலைகளை யொப்ப ஓங்கி யாதொரு குற்றமுமில்லாது விளக்கமுற்றுப் பிரகாசியா நிற்கும்.

 

919. இரசித நிலையிற் செம்பொ னிணைமணிக் கபாடஞ் சேர்த்தி

    விரிகதிர் மணிக டூக்கி விரித்தவா யிலினிற் புக்கி

    கரிமத மாரி சிந்திக் களிவழி வழுக்கல் பாயுந்

    துரகதக் குரத்தூண் மாய்க்குந் தோரண மறுகு சார்ந்தார்.

19

     (இ-ள்) அவ்விதம் பிரகாசியா நின்ற வெள்ளி நிலையின்கண் சிவந்த பொன்னினாற் செய்த இரத்தினவர்க்கங்கள் அழுத்தப் பெற்ற இரட்டைக் கதவுகளைச் சேர்த்துப் பரவிய கிரணங்களையுடைய மணிகளைத் தூக்கி விரியப்பெற்ற அந்த வாயிலின்கண் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நுழைந்து யானைகள் கன்னம்-கபோலம்-கோசமென்கிற மும்மதங்களாகிய மழையைப் பொழிந்து அதனாலுண்டாகும் வழுக்களையுடைய களிநிலத்தை அங்கு தாவா நின்ற குதிரைகளினது குளம்பின் கண்ணிருந்துண்டாகும் தூசிகளானவை மறைக்கா நிற்கும் தோரணங்களை யுடைய தெருவீதியின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

920. அகிற்புகை வயங்கு மாட மணியணி யிமயம் போன்றுந்

    துகிற்கொடி நுடங்கு வெள்ளி வரையெனச் சுதைகொண் மாட

    மிகச்செறி சாந்த மாட மேருவைப் போன்றும் வீதி

    தொகுத்தவத் திசைக டோறு மெண்ணில தோன்றக் கண்டார்.

20

     (இ-ள்) அவ்வண்ணம் போய்ச் சேர்ந்த நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வீதியினிடத்து அகிற்கட்டைகளை அக்கினியின்கண்ணிட்டுப் புகைக்குகின்ற புகையானது பிரகாசியா நிற்கும் அலங்காரம் செய்யப்பட்ட மாடங்கள் இமய பருவதத்தைப் போன்றும், வஸ்திரங்களினாற் செய்த கொடிகள் அசையா நிற்கும் சுண்ணச் சாந்தினைக் கொண்ட மாடங்கள் வெள்ளிய மலையைப் போன்றும், மிகவாய் நெருங்கிய சந்தனத்தையுடைய மாடங்கள் மகாமேரு பருவதத்தைப் போன்றும், அளவு படுத்தப்பட்ட திசைகளெல்லாவற்றிலும் கணக்கற்றுப் பிரகாசிக்கும்படி பார்த்தார்கள்.

 

921. துகிர்சிறு வேர்விட் டோடிச் சுடரொடுந் திகழ்வ தேபோற்

    பகிர்விரற் சிறுகான் மென்மை படர்சிறைப் புறவின் கூட்டந்

    திகழ்தரக் கூவு மோதை தெரிவையர் கூந்தற் கூட்டும்

    புகையினைப் பொறாது மாடம் புலம்புவ போன்ற தன்றே.

21