முதற்பாகம்
பிரகாசத்தையுடைய பல
இரத்தின வர்க்கங்களைப் பரவும்படி செய்துப் பிரதிதினமும் ஒலியானது மாறாது நிகழப்பெற்ற செல்வத்தை
யுடைய கடைவீதிகளையும் பார்த்தார்கள்.
927.
அடையல ரொடுங்க
மோதும் படைமுர சதிரு மோதை
யிடைபடு வறுமை யோட
விடுகொடை முரசி னோதை
கடைபடு வடிவேற் கண்ணார்
கடிமண முரசி னோதை
முடியுடை யரசர் வீதி
யெங்கணு முழங்கக் கண்டார்.
27
(இ-ள்)
அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சத்துராதிகள் ஒடுக்கமுறும்படி அடியா நிற்கும்
படை முரசங்கள் முழங்கா நின்ற ஓசையும், இடையிற் பொருந்துகின்ற தாரித்திரயமானது ஓடும்படி கொடா
நின்ற கொடை முரசங்களினோசையும் கூர்மை தங்கிய வேலாயுதமும் கடைபடா நிற்கும் கண்களையுடைய பெண்களினது
மிகுந்த மணமுரசங்களினோசையும், மகுடமுடியினையுடைய அரசர்களினது வீதிக ளெவ்விடத்திலும் முழங்கும்படி
பார்த்தார்கள்.
928.
வாரியின் மதங்கள்
சிந்தி வாரண மிடைந்து செல்லத்
தேரினந் திரண்டு
கூடிச் செழுங்கொடி நுடங்கி நிற்பப்
பாரிடை துகள்விண்
டூர்க்கும் பரித்திரண் மலிந்து தோன்ற
வாரவார் முரச றாத
வரசர்வீ திகளுங் கண்டார்.
28
(இ-ள்)
அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் யானைகளானவைச் சமுத்திரத்தைப் போல
மதங்களைப் பொழிந்து நெருக்கமுற்று நடந்து போகவும், தேர்க்கூட்டங்கள் தொகையாகச் சேர்ந்து
அவற்றின் கண்ணுள்ள செழிய துகிற்கொடிகள் அசைந்து நிற்கவும், இப்பூமியின் கண்ணுள்ள தூசிகளானவை
ஆகாயத்தை மூடிக்கொள்ளும்படி செய்யும் குதிரைக் கூட்டங்கள் அதிகரித்துப் பிரகாசிக்கவும், தோலினது
வார்களையுடைய முரசங்களினோசையானது பொருந்தும் வண்ணம் நீங்காத இராஜ வீதிகளையும் பார்த்தார்கள்.
929.
புகர்முகச் சிறுகண்
வேழப் பொருப்பொடு பொருப்புத் தாக்கி
யிகல்பொர மூட்டுஞ்
செவ்வி யிளையவர் குழாத்தி னோசை
முகிலொடு மசனி
பொங்கி முழங்குவ போன்றும் விண்ணு
மகிலமு மதிரத் தோன்று
மணிமறு கிடமுங் கண்டார்.
29
(இ-ள்)
அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் புள்ளிகள் படர்ந்த முகத்தையும்
சிறிய கண்களையுமுடைய யானைகளாகிய மலைகளுடன் மற்றும் யானைகளாகிய மலைகளைத் தாக்கச் செய்து
போர்புரியும்படி
|