பக்கம் எண் :

சீறாப்புராணம்

470


முதற்பாகம்
 

1220. அந்த நாட்டொடுத் தளவிடற் கருநெடுங் காலஞ்

     சுந்த ரத்தொடு மமரர்கள் புகுந்தவண் டொழுது

     புந்தி கூர்ந்துடற் புளகுற விறைவனைப் புகழ்ந்து

     சந்த தம்மிவை தொழிலெனத் திரிந்தவண் சார்வார்

5

      (இ-ள்) அந்தநாள் தொடங்கிக் கணக்கிடுதற்கரிய நெடிய காலம் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் அழகுடன் அக்கஃபத்துல்லாவில் நுழைந்து மனமானது கூரப் பெற்றுச் சரீரம் புளகமுறும்படி யாவற்றிற்கும் இறைவனான ஜல்லஷானகுவத்த ஆலாவைப் பிரதி தினமும் வணங்கித்துதித்து இவையே வேலையென்று சொல்லும் வண்ணம் திரிந்து சுவர்க்கலோகத்தின் கண் போய்ச் சேருவார்கள்.

 

1221. ஆத நன்னபி யமருல கிழிந்திவ ணடைந்து

     மாதவ் வாவுட னின்புற வாழுமந் நாளிற்

     காதல் கூர்தரக் ககுபத்துல் லாவினைக் கடிதி

     னேத முற்றிடா திடம்பெறப் பின்னியற் றினரால்.

6

      (இ-ள்) பின்னர் நல்ல நபிப்பட்டம் பெற்ற மூலபிதாவான நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்கள் தேவர்களின் உலகமாகிய சொர்க்கலோகத்தை விட்டும் இறங்கி இந்தப் பூலோகத்தின் கண் வந்து சேர்ந்து மாதான ஹவ்வா அலைகிஸ்ஸலாத்துடன் இனிமை பொருந்தும் வண்ணம் வாழுகின்ற அந்தக் காலத்தில் விரைவாய் ஆசையானது அதிகரிக்கும்படி குற்றமுறாது அக்கஃபத்துல்லாவை விசாலமாகச் செய்தார்கள்.

 

1222. முதிருங் கேள்விய ராதத்தின் மக்களின் முதியோர்

     கதிரு மிழ்ந்துகா ரணம்பல விளங்குககு பாவைப்

     பிதிர்த ரும்படி கண்டதைப் பெலத்தொடு நிறுவி

     யதிக மாகச்செய் துயர்த்தின ரழகொடு மிலங்க.

7

      (இ-ள்) பின்னர் நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்களின் புதல்வர்களில் முற்றிய கேள்வியை யுடையவரான வயதால் முதிர்ந்தவர் கிரணங்களை நானாபக்கங்களிலும் உமிழப் பெற்று பலகாரணங்கள் விளங்கா நிற்கும் அந்தக் கஃபத்துல்லாவைப் பிதிரும் வண்ணம் தங்கள் கண்களினாற் பார்த்து அதைப் பெலத்துடன் அழகோடும் பிரகாசிக்கும்படி நிறுத்தி அதிகமாகச் செய்து உயர்த்தினார்கள். 

 

1223. உரந்த ரும்படி நின்றெழில் பிறங்கிட வொளிகள்

     பிரிந்தி டாதககு பாவெனும் பேரின்பத் துறையை

     விரிந்த காரண நூகுதன் காலத்தில் விண்மட்

     டிரைந்தெ றிந்திடும் பிரளயத் திடிந்ததை யன்றே.

8