முதற்பாகம்
(இ-ள்) இரக்கமற்ற இருதயமமைந்த கொடிய கொலைத் தொழிலை யுடைய திருடர்கள் அக்கஃபத்துல்லாவை
நெருங்கி அங்கே திரவியமுண்டுமென்று சொல்லி அதன் நடுப்பக்கத்தில் களவு செய்யா நின்ற கன்னக்கோல்
வைத்து முழுவதும் தோண்டி அடிச்சுவரை அழிக்கவே, அந்தகாரமான தற்றுப்போகும் கிரணங்களை யுடைய மேனிலையுடன்
அந்தக் கஃபாவானது இடிந்து விழுந்தது.
1231.
புடைப்ப றித்ததி
லுட்படச் சோதனை போக்கி
யுடைப்பெ
ரும்பொரு ளில்லெனக் கரவிட ரொதுங்கி
யிடைப்ப டாததற்
கிசைந்தன மெனமன மிடைந்து
துடைப்ப
ரும்பெரும் பழிசுமந் தயலினிற் போனார்.
16
(இ-ள்) அவ்வாறு
அந்தத் திருடர்கள் அக்கஃபத்துல்லாவின் பக்கங்களில் தோண்டி அதன் அகத்தில் சோதனை செய்து
முடித்துப் பெருமையையுடைய திரவியம் யாதொன்று மில்லையென்று அதை விட்டும் நீங்கி நாம் இடைப்படாத
இவ்வேலைக்கு இடைப்பட்டோமென்று தள்ளுதற்கரிய பெரிய பழியைச் சுமந்தவர்களாய்ப் புறத்திற்
போனார்கள்.
1232.
கறையி லாமுழு மதியெனுங்
ககுபத்துல் லாவைக்
குறைசி மன்னவ
ரனைவரு மொருங்குறக் கூண்டு
நறையு றுஞ்சுதை மதிடனை
நாலுபங் காகத்
துறைபெ றும்படி
பிரித்துச்செய் தொழிறுணிந் தனரே.
17
(இ-ள்) அவர்கள்
அவ்விதம் போகவே குறைஷிக்குலத்தின் அரசர்களான அனைவர்களும் ஒன்றாய்க் கூடிக் குற்றமற்ற
பூரணச் சந்திரனென்று சொல்லா நிற்கும் அக்கஃபத்துல்லாவினது பரிமளத்தைக் கொண்ட சுண்ணச்சாந்தையுடைய
மதிள்களை நான்குபாகமாகப் பிரிவு செய்து விசாலமாய் வேலைசெய்ய முயன்றார்கள்.
1233.
வசையி லாக்குலக்
குறைசிக ளனைவரு மதித்துத்
திசையும் வானமும்
போற்றிய செவ்விய கசுறி
லசுவ தென்னுமக் குவட்டினை
யணைத்தெடுத் தசையா
திசையுந் தானத்தில்
வைத்திடு பவரெவ ரென்றார்.
18
(இ-ள்) அவ்வாறு
முயன்ற குற்றமற்ற மேன்மையையுடைய குறைஷியர்களான அவர்களெல்லாவரும் மதிப்பிட்டு எண்டிசைகளும்
வானலோகமும் துதியா நிற்கும் அழகிய ஹஜறுல் அசுவதென்று சொல்லும் கருங்கல்லைத் தழுவித் தூக்கவும்
அது அசையாததால் அது பொருந்தும் இடத்தில் வைப்பவர்கள் யாவரென்று கேட்டார்கள்.
|