பக்கம் எண் :

சீறாப்புராணம்

483


முதற்பாகம்
 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1253. மானுட வடிவாய் வந்த வானவர்க் கரசன் செவ்வி

     யானனக் குரிசி லென்னு மகுமதின் வதன நோக்கி

     நானமுங் கியமெய்ச் சோதி நாயகா வரையின் கண்ணே

     தீனுற விருக்கின் றீரோ வென்றுசே ணடைந்தா ரன்றே.

13

      (இ-ள்) அவ்வாறு மனுஷியசொரூபமாய் வரப்பெற்ற தேவராதிபரான ஜிபுறீல் அலைகிஸ்ஸலா மவர்கள் அழகிய முகத்தைக் கொண்ட குரிசிலென்று சொல்லும் அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வதனத்தைப் பார்த்து, கஸ்தூரி வாசனை முங்கப் பெற்ற காத்திரத்தினது பிரகாசத்தையுடைய நாயகமானவர்களே! இம்மலையினிடத்தில் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது வந்து பொருந்துதற்காக இருக்கின்றீர்களோ? என்று சொல்லிவிட்டு ஆகாயத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1254. மற்றைநாட் பருதி ராவில் கிறாமலை யிடத்தில் வானோர்

     கொற்றவ ருறைந்து வள்ளற் குவவுத்தோள் வனப்பு நோக்கி

     யுற்றவென் னுயிரே நீரிங் குறைந்தினி ரோவென் றோதி

     வெற்றிவெண் விசும்பு கீறி மேலுல கிடத்திற் சார்ந்தார்.

14

      (இ-ள்) அவ்விதம் போய்ச் சேர்ந்த அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் மற்ற நாளாகிய ஞாயிற்றுக் கிழமை இராவில் அந்த ஹிறாமலையின்கண் வந்து தங்கிய வள்ளலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திரட்சியுற்ற இரு புயங்களினது அழகையும் பார்த்துப் பொருந்திய எனது ஜீவனானவர்களே! நீங்கள் இவ்விடத்தில் தங்கினீர்களோ? என்று சொல்லி வெற்றியையுடைய வெள்ளிய ஆகாயத்தைப் பிளந்து சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1255. விண்ணகத் தரசன் தோன்றும் விதிமுறை யறியா வள்ளன்

     மண்ணகத் திவரை நேரும் வனப்பினில் விசையி லந்தக்

     கண்ணகன் வான நாட்டுங் காண்குற வரிதே யென்ன

     வெண்ணமுற் றிதயத் தாராய்ந் திருப்பிடம் பெயர்ந்தி ராரால்.

15

      (இ-ள்) ஆகாயலோகத்தின் அதிபரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் உதயமாகும் விதத்தினது ஒழுங்குகளை யுணராத வள்ளலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இடமகன்ற இப்பூலோகத்திலும் அந்த வானலோகத்திலும் இவரைப் போல் பொருந்தும் அழகிலும்