முதற்பாகம்
துரிதத்திலும்
பார்ப்பது அரிதாகுமென்று சொல்லி மனசின்கண் சிந்தித்துத் தாங்கள் இருந்த இடத்தை விட்டும்
பெயர்ந்தார்களில்லர்.
1256.
வரிசைநேர் றபீவு
லவ்வல் மாதமீ ரைந்து நாளிற்
றெரிதர விளங்குந்
திங்க ளிரவினிற் சிறப்பு மிக்கோ
னருளினில் சபுற
யீல்வந் தருவரை யிடத்தின் வைகுங்
குரிசிறன் கமலச்
செங்கண் குளிர்தர வெதிர்ந்து நின்றார்.
16
(இ-ள்) அப்போது
சங்கை பொருந்திய றபீயுல் அவ்வல் மாதம் பத்தாந்தேதியில் தெரியும் வண்ணம் பிரகாசியா நிற்கும்
திங்கள் கிழமையிராவில் வரிசையானது அதிகரித்தவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் திருவருளினால்
ஹபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் வானலோகத்தை விட்டும் இறங்கி வந்து அரிதாகிய அந்த ஹிறாமலையின்கண்
தங்கியிருக்கும் குரிசிலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தாமரை மலர்போலும்
சிவந்த இரண்டு கண்களும் குளிர்ச்சியுறும்படி எதிராக நின்றார்கள்.
1257.
நானிலம் பரப்புஞ்
சோதி நாயகக் கடவு டம்மை
வானகத் திருந்த
சோதி வந்துசந் தித்த தேபோற்
கானமர் துண்டச்
செங்கட் கலைநிலாத் தவழு மியாக்கை
யீனமில் சபுற
யீல்வந் திறையவன் சலாமுஞ் சொன்னார்.
17
(இ-ள்)
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென்னும் நான்கு வகைப்பட்ட நிலங்களிலும் விரியும்படி செய்யும்
பிரகாசத்தையுடைய நாயகக் கடவுளான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை ஆகாயத்தின்கண்
இருக்கப் பெற்ற மின்னலானது வந்து சந்தித்ததைப் போல வாசனை தங்கிய முகத்தினது சிவந்த கண்களையும்
சந்திரனது பிரகாசத்தை யொத்த பிரகாசமானது தவழா நிற்கும் சரீரத்தையுமுடைய குற்றமற்ற
ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் அவ்வாறு வந்து யாவற்றிற்கும் இறைவனான ஜல்லஷானகு வத்த ஆலாவின்
சலாமும் சொன்னார்கள்.
1258.
மரகதப் பத்தி
கோலி வச்சிரத் தாரை சாத்திs
யுரகமா மணிக ணாப்ப
ணொளிபெறக் குயிற்றி வெள்ளைத்
தரளமென் புருட ராகம்
பலமணி தயங்கத் தாக்கிச்
சொரிகதிர் பரப்புஞ்
சோதித் துகிலினைக் கரத்திற் கொண்டார்.
18
|