பக்கம் எண் :

சீறாப்புராணம்

491


முதற்பாகம்
 

படுக்கும்படி செய்து வஸ்திரத்தைக் கொண்டு பொருந்தும் வண்ணம் மூடிப் பக்கத்தில் இருந்தார்கள்.

 

1275. நொந்து மெய்யகம் பதறிடக் கணவரை நோக்கி

      யெந்த னாருயி ரேயிக லடலரி யேறே

      சிந்தை சிந்திமெய்த் திடுக்கொடு மதிமுகந் தேம்ப

      வந்த வாறெவை யுரைக்கவென் றுரைத்தனர் மடமான்.

35

      (இ-ள்) அவ்விதமிருந்த இளமானாகிய கதீஜாநாயகி யவர்கள் தங்களின் சரீரமும் மனமும் வருத்தமுற்று நடுங்கும் வண்ணம் நாயகரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்துப் பொருந்திய எமது ஜீவனானவர்களே! பகைமையாகிய யானைகட்கு வலிமையையுடைய ஆண்சிங்கமானவர்களே! தங்களின் கருத்தானது அழியப் பெற்றுச் சரீரத் திடுக்கத்துடன் முகம் வாட்டமடைவதற்குத் தங்களில் வந்து சேர்ந்த வரலாறு யாவை? அவையைச் சொல்லுங்களென்று கேட்டார்கள்.

 

1276. மலையி னுச்சியி னிருந்தது மொருவர்வந் தடுத்து

      நிலைபெ றுந்துகில் கரத்தளித் துரைத்தது நெருங்க

      வுலைவு றத்தனி யணைத்தது முரைத்துளப் பயத்தா

      லலம லர்ந்தன னென்றன ரரசருக் கரசர்.

36

      (இ-ள்) அப்போது இராஜாதிபரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தாங்கள் ஹிறாமலையினது உச்சியின் கண்ணிருந்ததையும், ஒருவர் அங்கு வந்து தங்களை நெருங்கி நிலைபெறா நிற்கும் ஒரு வஸ்திரத்தைக் கையிற் கொடுத்து சொன்னதையும், நெருங்கும்படி யுலைவுறும் வண்ணம் ஏகமாய்க் கட்டித் தழுவியதையும், அவர்களுக்குச் சொல்லி மனப்பயங்கரத்தினால் வருத்தமுற்றேனென்று சொன்னார்கள்.

 

1277. துணைவர் கூறிய மாற்றமு மறைகள்சொற் றதுவு

      மிணைப டுத்திநேர்ந் தின்பமென் றுளத்தினி லிருத்திப்

      பிணையை நேர்விழிக் கனிமொழிச் சிறுபிறை நுதலா

      ரணையுந் தம்வயிற் றுனிபல வகற்றின ரன்றே.

37

      (இ-ள்) மானை நிகர்த்த கண்களையும் கனி போன்ற வார்த்தைகளையுங் கொண்ட இளஞ்சந்திரன் போலும் நெற்றியை யுடையவர்களான கதீஜா நாயகியவர்கள் தங்களின் நாயகரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிய சமாச்சாரங்களையும் வேதங்கள் சொல்லியதையும் இணைபடுத்தி யுடன்பட்டு இனிமையானது தானென்று மனத்தின் கண் இருக்கும்படி செய்து தம்மிடத்திற் பொருந்தா நிற்கும் பல துன்பங்களையும் நீக்கினார்கள்.