முதற்பாகம்
(இ-ள்) நபிகள்
பெருமானான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு இப்பூமியின்கண் பெரிய ஆச்சரியமான
பொருளாய்ச் சொன்ன வார்த்தைகளெல்லாவற்றையும் உறக்கத் தென்பவன் தனது மனசின்கண் விரும்பி
நெருங்கிய பிரகாசத்தைக் கொண்ட செழிய இரத்தினக்கொடிபோலும் இடையையுடைய கதீஜா நாயகியவர்களின்
இருகாதுகளும் குளிரவும், மனமானது சந்தோஷிக்கவும், அவற்றின் பொருளைத் தெரிந்துச்
சொல்லுவான்.
1291.
மலையல் வள்ளனும்
மிடத்தினில் வரைமிசை யடைந்த
தலைவர் நாயகன்
றூதரிற் சபுறயீல் சரதம்
பலக திர்த்துகில்
கரத்தளித் ததுநபிப் பட்டம்
விலக வோதுமென்
றோதிய துமக்குறும் வேதம்.
51
(இ-ள்)
வள்ளலாகிய முகம்மதானவர்களே! நீங்கள் மயங்காதீர்கள்! உங்களிடத்தில் மலையின்மீது வந்து சேர்ந்த
தலைவரானவர் யாவற்றிற்கும் நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதர்களில் ஜபுறயீலானவர்.
இது சத்தியம். பலகிரணங்களையுடைய வஸ்திரத்தைக் கையில் தந்தது நபிப்பட்டம் விளங்கும் வண்ணம்
ஓதுங்களென்று சொன்னது உங்களுக்கு வந்து சேராநிற்கும் புறுக்கானுல் அலீமென்னும் வேதம்.
1292.
உடலு லைந்திட விறுக்கிய துமதிடத் தினிமேல்
வடுவின் மும்முறை
யிடுக்கண்வந் துற்றது மாறும்
படியி டத்தினும்
மினத்தவர் பெரும்பகை விளைத்து
மிடரு றும்படி
யூரைவிட் டெழுத்துரத் திடுவார்.
52
(இ-ள்)
சரீரமானது உலைந்திடும்படிக் கட்டியிறுக்கினது இனிமேல் தங்களிடத்தில் மூன்று தரம் குற்றத்தையுடைய
இக்கட்டுகள் வந்து பொருந்தி அவை நீங்கிப் போகும். உங்களின் பந்துஜனங்கள் இந்தப் பூமியின்கண்
பெரிய பகையைத் துன்பமுறும் வண்ணம் உண்டாக்கியும் தங்களையும் ஊரை விட்டு எழும்பும்படி துரத்துவார்கள்.
1293.
என்ற விம்மொழி
மறையவ னுரைத்தலு மிசைத்தேன்
றுன்று மென்மலர்ப்
புயநபி மனத்தினிற் றுணுக்குற்
றொன்று மென்னினத்
தவர்பகை யெனக்குவந் துறுமோ
பொன்று மோவென
வுரைத்தலு முதியவன் புகல்வான்.
53
(இ-ள்) என்று
வேதியனான அவ்வுறக்கத்தென்பவன் சொல்லிய இவ்வார்த்தைகளைச் சொன்ன மாத்திரத்தில், இனிய
தேனானது நெருங்கிய மெல்லிய புஷ்பமாலையணிந்த
|