முதற்பாகம்
தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனப்பயங்கரமுற்று எனக்குப்
பொருந்திய எனது பந்துக்களின் விரோதம் வந்து சேருமா? அல்லது அவ்விதம் சேராது அழிந்து
போகுமா? என்று கேட்கவும் முதியவனான அவன் சொல்லுவான்.
1294.
முன்னர் மாமறை நபியெனும்
பெயர்முதி யவருக்
கின்னல் வந்துறா
திலதுநும் மிடத்திட ரணுகா
நன்ன லம்பெறு நபிகணா
யகமுநீ ரலது
மன்னு மானில நபியினி
யிலையென வகுத்தான்.
54
(இ-ள்) ஆதியில் மகத்தான வேதத்தையுடைய நபியென்று சொல்லிய முதியவர்களுக்குத் துன்பமானது
வந்து பொருந்தாது இருக்கவில்லை. ஆனால் உங்களிடத்தில் அப்படிப்பட்ட துன்பங்கள் வந்து
நெருங்காது. நல்ல மேன்மைபெறா நிற்கும் நபிகளினது நாயகமும் நீரேயல்லாமல் பொருந்திய இந்தப்
பெரிய பூமியின்கண் இனிமேல் நபியானவர்க ளில்லரென்று வகுத்துச் சொன்னான்.
1295.
மாத வத்துறும் பொருளெனு
முகம்மது நபிதம்
பாத பங்கயத்
திணைமிசைச் சிரங்கொடு பணிந்து
கோதி லாக்கதீ சாதமை
யிருகரங் குவித்துத்
தீதி லாதெழுந் தேகினன்
பலகலை தெளிந்தோன்.
55
(இ-ள்) அவ்வாறு சொன்ன பல சாத்திரங்களைக் கற்றுத் தெளிந்தவனான அவ்வுறக்கத் தென்பவன்
மகாதவத்தோடும் வந்து பொருந்திய பொருளென்று சொல்லாநிற்கும் நபிகள் பெருமான் நபிமுகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாதங்களாகிய இருதாமரை மலர்களின்மீதும்
தனது தலையைக் கொண்டு தாழ்ந்துக் குற்றமற்ற கதீஜாநாயகி யவர்களை இரண்டு கைகளையும் குவியும்படி
செய்து வணங்கி யாதொரு தீதுமில்லாது தானிருந்த இடத்தை விட்டு மெழுந்துத் தனது வீட்டை நோக்கி
நடந்து சென்றான்.
|