பக்கம் எண் :

சீறாப்புராணம்

498


முதற்பாகம்
 

தொழுகைவந்த வரலாற்றுப் படலம்

 

கலிவிருத்தம்

 

1296. உடையவ னொருவன்ற னுண்மைத் தன்மையை

     நடைவர விளக்கிநல் வழியி லியாரையு

     மடைதர வழைத்திடற் கனுப்புந் தூதரென்

     றிடைவரு மமரர்கோ னீய்ந்த பட்டமே.

1

      (இ-ள்) யாவற்றையுஞ் சொந்தமாயுடையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் ஒருவன். அவனது சத்தியமாகிய தன்மையை முறையாக விளக்கி யாவர்களையும் நல்ல மார்க்கத்தில் சேரும்படி கூப்பிடுவதற்கு அனுப்பாநிற்கும் தூதரென்று தங்களிடத்தில் வரும் அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குக் கொடுத்த நபிப்பட்டம்.

 

1297. ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு

     மருத்தமே யுரைகலி மாவந் நிண்ணயப்

     பொருத்தமீ மானடை புனைத லாமமல்

     திருத்தமே விவையிசு லாமிற் சேர்தலே.

2

      (இ-ள்) யாவற்றிற்கும் நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் ஒருவன். நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்நாயகனுக்குரிய தூதரென்று சொல்லும் பொருளே ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு யென்று ஓதாநிற்கும் கலிமா அந்நிண்ணயத்தினது பொருத்தமே ழுஈமான்ழு அதற்குரிய முறைமைகளை அலங்காரமாய்ச் செய்வதேயாகும் ழுஅமல்ழு அவற்றின் திருத்தமாகிய இவைகளே தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தில் சேருதல்.

 

1298. இப்பொருள் பொதிந்ததோ ரிறைமை தாங்கிய

     மைப்புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத்

     தொப்புர வொழுகுவார்க் குரிமை யார்க்கெலாஞ்

     செப்பினர் வெளிப்படாச் சிறப்பிற் றாகவே.

3