பக்கம் எண் :

சீறாப்புராணம்

500


முதற்பாகம்
 

1302. இன்னதன் மையின்கன வியாது கொல்லென

     மன்னிய மனத்தினன் மதியிற் றேர்குவர்

     பன்னுவர் புதுமையிற் பலனுண் டாமென

     வுன்னுவர் தெளிந்தொரு வருக்கும் விண்டிலார்.

7

      (இ-ள்) அவ்விதம், சந்தோஷமடைந்து இப்படிப்பட்ட தன்மையின் சொப்பனமானது யாதாயிருக்குமென்று தங்களின் மனசின்கண்ணே பொருந்திய நல்ல அறிவினால் தெளிவார்கள். அன்றியும், ஆச்சரியமான இந்த சொப்பனத்தில் நமக்குப் பிரயோசன முண்டுமென்று சொல்லுவார்கள். மனசின்கண் தேர்ந்து ஆலோசிப்பார்கள். வேறே யொருவருக்கும் சொல்லார்கள்.

 

1303. பொன்னக ரத்தினும் புவியுங் காணுறா

     நன்னல முண்டுநம் மிடத்தி லென்னவே

     யின்னலைப் பிரித்தெறிந் தெழுந்து பொற்புய

     மன்னவர் நபியுறை மனையி லாயினார்.

8

      (இ-ள்) அவ்வாறு சொல்லாத மன்னவரான அபூபக்கரவர்கள் சொர்க்கலோகத்திலும் இந்தப் பூலோகத்திலும் காணாத நல்ல நலமானது நம்மிடத்தில் உண்டுமென்று சொல்லி மனசின்கண் தங்கிய துன்பங்களைப் பிரித்து வீசித் தாங்களிருந்த இடத்தை விட்டு மெழும்பி அழகாக நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்கியிருக்கும் வீட்டின்கண் வந்தார்கள்.

 

1304. ஆரணக் கடவுளு மழகின் கன்னியும்

     பூரண மனத்துட னிருத்திப் போற்றியே

     தாரணி யிடத்தினிற் றனிய னாலுறுங்

     காரண மனைத்தையுங் கழறி னாரரோ.

9

      (இ-ள்) வேதக்கடவுளான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அழகையுடைய கன்னியாகிய கதீஜாறலியல்லாகு அன்ஹா அவர்களும் நிறைவாகிய மனசோடும் அவ்வாறு வந்த அபூபக்கரவர்களை இருக்கும்படி செய்து அவர்களைப் புகழ்ந்துத் தனியவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவினால் இந்தப் பூமியின்கண் பொருந்தா நிற்கும் காரணங்களெல்லாவற்றையும் சொன்னார்கள்.

 

1305. அம்மொழி கேட்டட லரியபூ பக்கர்

     தம்மனக் கனவையுஞ் சார்ந்த செய்தியுஞ்

     செம்மையி னுணர்ந்துளத் திருத்திச் சிந்தையின்

     விம்மிதத் தொடும்புயக் களிப்பு வீங்கினார்.

10

      (இ-ள்) வலிமையையுடைய சிங்கமாகிய அபூபக்கரவர்கள் அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளைத் தங்களின் இரு