பக்கம் எண் :

சீறாப்புராணம்

501


முதற்பாகம்
 

காதுகளினாலும் கேள்வியுற்று மனசின் கண்ணுள்ள சொப்பனத்தையும் அங்கு பொருந்திய சமாச்சாரத்தையும் செவ்வையா யறிந்து இருதயத்தில் இருக்கும்படி செய்து தோள்களினது பூரிப்போடும் சிந்தையின்கண் சந்தோஷமதிகரித்தார்கள்.

 

1306. சுரத்தினிற் பெருநதி யழைத்துத் தோன்றிய

     சரத்தினிற் கட்செவி தடிந்து பாதகன்

     கரத்தினைப் பொருத்திய காவ லாளநும்

     வரத்தினை யெவரினும் வகுக்கற் பாலதோ.

11

      (இ-ள்) அவ்வித மதிகரித்துப் பாலைநிலத்தின்கண் பெரிய ஆற்றை வரும்படி செய்துப் பாதையிலுண்டான சர்ப்பத்தைக் கொன்றுப் பாதகனான அந்த ஷாம் தேசத்தானின் கைகளைப் பொருந்தச் செய்த இராஜாவானவர்களே! உங்களின் வரத்தை யாவராலும் வகுக்கற்பாலதோ.

 

1307. என்றுரைத் தருளிய வெழிலபூ பக்கர்

     தன்றிரு மதிமுக நோக்கித் தாழ்விலா

     வென்றிகொண் டுறுங்கலி மாவை விள்ளுத

     னன்றுமக் கெனநபி நவிற்றி னாரரோ.

12

      (இ-ள்) என்று சொல்லிய அழகிய அபூபக்க ரவர்களின் மேன்மையாகிய சந்திரன் போன்ற முகத்தை நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்துக் குறைவற்ற விஜயத்தைக் கொண்டு பொருந்தா நிற்கும் ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு என்னும் கலிமாவை நீவிர் சொல்லுதல் உமக்கு நல்லதென்று சொன்னார்கள்.

 

1308. அருமறை நாயக நபிக ளானவர்

     தெரிதரும் புதுமையின் வழியிற் சேர்த்துவர்

     பெரியவன் றூதென வெனக்கும் பெட்புற

     விரிதரும் புதுமையொன் றுதவ வேண்டுமே.

13

      (இ-ள்) அதைக் கேட்ட அபூபக்க ரவர்கள் அருமையான வேதங்களினது நாயகமானவர்களே! நபிகளானவர்கள் விளங்கா நிற்கும் அற்புதங்களினால் ஜனங்களைத் தங்களின் மார்க்கத்திற் சேர்ப்பார்கள். ஆதலினால் தாங்களும் பெரியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலென்று பெருமை பொருந்தும் வண்ணம் எனக்கும் விரிவாகிய ஒரு அற்புதங் காட்டுதல் வேண்டும்.