முதற்பாகம்
1316.
அலகில்வண் புகழபூ பக்கர் சொல்லினைப்
பெலனுறக்
குறித்தவ ணடைந்த பேர்க்கெலா
மலைவற
வறத்தொடுஞ் சுவன வாழ்வெனு
நிலைபெற நல்வழி
நிகழ்த்தி னாரரோ.
21
(இ-ள்)
கணக்கற்ற வளமையான கீர்த்தியையுடைய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களின்
வார்த்தைகளைப் பெலனுறும்படி மனசின்கண் குறித்து அவ்விடத்தில் அவ்வாறு வந்து சேர்ந்த ஜனங்க
ளெல்லாவருக்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மயக்கமறத் தருமத்துடன்
சொர்க்க வாழ்வென்னும் நிலைபரத்தைப் பெறும் வண்ணம் நல்ல சன்மார்க்கத்தைச்
சொன்னார்கள்.
1317.
பணவர
வடர்ந்தவர் பகரக் கேட்டலு
மணமனத்
தொடுங்கதி வாழ்வுக் கீதொரு
துணையென நற்கலி
மாவைச் சொல்லிநின்
றிணையிலான் றூதடி
யிறைஞ்சி வாழ்த்தினார்.
22
(இ-ள்)
படத்தினையுடைய சர்ப்பத்தைப் பொருதியவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லால்லாகு அலைகிவசல்ல
மவர்கள் அவ்வாறு சொல்லக் கேட்டமாத்திரத்தில் அவர்க ளியாவர்களும் மனமகிழ்ச்சியுடன்
மோட்சவாழ்வுக்கு இஃது ஒப்பற்ற துணையென்று சொல்லி நன்மை பொருந்திய ழுலாயிலாஹ இல்லல்லாகு
முஹம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவைத் தங்களின் வாயினால் ஓதி ஒப்பற்றவனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய அந்நபிகள் பெருமானவர்களின் பாதங்களை வணங்கி நின்றுப்
புகழ்ந்தார்கள்.
1318.
கரும்பெனு நபிகலி
மாவைக் காமுற
விரும்பிய
பேர்களிற் றலைமை மிக்கவ
ரரும்புவிக் கரசபு
துற்றஃ மானுடன்
றரும்புகழ்
சுபைறுதல் காவுஞ் சகுதுவும்.
23
(இ-ள்)
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது கரும்பென்று சொல்லா நிற்கும்
கலிமாவை அவ்வாறு ஆசையுறும்படி விருப்பமுற்ற ஜனங்களில் தலைமைத் தனத்தினால் மிகுந்தவர்கள்
அரிய புவியினுக்கு அரசாகிய அப்துர்றஹ்மானுடன் கீர்த்தியைத் தரா நிற்கும் சுபைறும் தல்காவும்
சகுது றலியல்லாகு அன்கு அவர்களும்.
1319.
அருமறைப் பொருட்குரை யாணி யாகிய
வரிசைநன்
னெறியுது மானு மாசிலாத்
திருநபி
பெயர்க்கலி மாவைச் செப்பிய
பரிசனத்
தொடுந்தனி பழகு நாளினில்.
24
|