முதற்பாகம்
(இ-ள்)
அருமையாகிய வேதப்பொருள்கட்கு உரையாணியான சங்கைகொண்ட நல்ல சன்மார்க்கத்தையுடைய உதுமான்
றலியல்லாகு அன்கு அவர்களும் குற்றமற்ற தெய்வீகத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் திருநாமத்தையுடைய கலிமாவை ஓதிய மற்றும் பரிஜனங்களோடும் ஒப்பற்ற பழகாநிற்கும்
காலத்தில்.
1320.
அண்டருக் கரசிழிந் தடுத்தென் முன்னுரை
விண்டனர்
போயினர் மறுத்து வெற்பிடைக்
கண்டில னெனமனங்
கலங்கிக் கார்க்கடன்
மண்டலம்
புகழ்நபி வருத்த முற்றனர்.
25
(இ-ள்) கரிய
சமுத்திரித்தையுடைய இப்பூலோக முழுவதும் போற்றா நிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் அமராதிபரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் ஆகாயத்தை விட்டுமிறங்கி எனது முன்னர்
நெருங்கி வார்த்தைகள் பேசிப் போனார்கள். மறுத்தும் அந்த ஹிறாமலையின்கண் அவர்களைப்
பார்த்திலேனென்று சொல்லி மனமானது கலக்கமுற்று வருத்தமடைந்தார்கள்.
1321.
குருநபிப் பட்டமே
கொண்ட மேலவர்
வருவது நிகழ்வதும்
வழுத்து வாரெனு
மிருநில
மாந்தருக் கென்சொல் வோமெனப்
பருவர லடிக்கடி
படர்வ தாயினார்.
26
(இ-ள்)
அன்றியும், நபிப்பட்டங் கொண்ட குருவாகிய மேலானவர்கள் இனிமேல் வரப்பட்டதையும்
நடக்கப்பட்டதையும் சொல்லுவார்களென்று சொல்லும் பெரிய இப்பூலோகத்தின் கண்ணுள்ள
மனுஷியர்களுக்கு யாம் யாது சொல்லுவோமென்று அடிக்கடி துன்பமானது படர்வதாயினார்கள்.
1322.
மருப்புகுங்
கருங்குழன் மடந்தை தம்மொடு
மிருப்பர்பின்
றனித்தெழுந் திரவி னேகியப்
பொருப்பிடை
வைகுவர் புகழ்ந்து விண்ணினை
விருப்பொடு
நோக்குவர் மீள்வ ரெண்ணுவார்.
27
(இ-ள்)
அன்றியும், வாசனையானது புகுதப் பெற்ற கரிய கூந்தலையுடைய மடந்தையாகிய கதீஜா றலியல்லாகு
அன்ஹா அவர்களோடும் இருப்பார்கள். இராக்காலங்களில் ஏகமாய் எழும்பிச் சென்று அந்த
ஹிறாமலையின்கண் தங்கியிருப்பார்கள். ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவைத் துதித்து ஆசையோடும்
ஆகாயத்தைப் பார்ப்பார்கள். திரும்பி வருவார்கள். மனசின்கண் ஆலோசிப்பார்கள்.
|