முதற்பாகம்
1323.
வாணுதற் குரைதர
மறுப்பர் தம்முளம்
பாணியிற்
கசியெனப் பதைப்பர் நல்லுரை
பேணினர்
தம்முகம் பெரிது நோக்குற
நாணுவ
ருயிர்ப்பர்மெய் நலிதல் கொண்டனர்.
28
(இ-ள்)
அன்றியும், ஒள்ளிய நெற்றியையுடையவர்களான கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்களுக்குச் சொல்ல
மறுப்பார்கள். தங்களின் மனமானது ஜலத்தின்கண் தோற்றும் சந்திரனைப் போலப் பதறுவார்கள்.
தங்களினது நன்மை பொருந்திய வார்த்தைகளைப் பேணினவர்களின் முகத்தை அதிகமாய்ப்
பார்ப்பதற்கு வெட்கமடைவார்கள். பெருமூச்சு விடுவார்கள். மேலும் சரீரவாட்டமுற்றார்கள்.
1324.
என்னினி
யுரைப்பதென் றெண்ணி யின்புறுந்
தன்னுயிர்த்
துணைவியைத் தணந்து நெஞ்சகந்
துன்னிய துயரொடு
மெழுந்து சூன்முகின்
மன்னிய தடவரை
முகட்டின் வைகினார்.
29
(இ-ள்)
அவ்விதம் வாட்டமுற்றுத் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு இனிச்சொல்லுவது யாதென்று நினைத்து
இனிமை பொருந்திய தங்களின் உயிர் போன்ற நாயகியாகிய கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்களை
நீங்கி நெஞ்சினுள் நெருங்கிய துன்பத்தோடும் எழும்பிச் சூலமைந்த மேகங்கள் பொருந்திய பெரிய
அந்த ஹிறாமலையினது சிகரத்தின்கண் தங்கியிருந்தார்கள்.
1325.
தனியவன் றூதெனச்
சார்ந்து பூவிடை
நனிபெறும் புதுமைக
ணடத்த லில்லெனிற்
பனிவரை
நின்றுவீழ்ந் திடுதல் பண்பலா
லினியிருப் பதுபழு
தென்னுங் காலையில்.
30
(இ-ள்)
அவ்வாறு இருந்து நாம் தனியவனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலென்று இப்பூமியின்கண் பொருந்தி
மிகுத்த அற்புதங்களை நடத்துவது இல்லையென்றால் இந்தப் பனியையுடைய மலையில் நின்று கீழே
விழுந்திறந்து விடுவதே தகுதியல்லாமல் இனிமேல் இவ்வுலகத்தில் ஜீவித் திருப்பது குற்றமென்று
சொல்லுஞ் சமயத்தில்.
1326.
வாடிய பயிர்க்குறு
மழையும் போற்றினந்
தேடிய
பொருட்கரஞ் சேரு மாறென
வீடில்வா
னவர்க்கிறை விரைவி னேகியக்
கோடுறை
நபிவயின் குறுகி னாரரோ.
31
(இ-ள்)
வீடுதலில்லாத அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் தண்ணீரில்லாமல் வாட்டமுற்ற
|