பக்கம் எண் :

சீறாப்புராணம்

507


முதற்பாகம்
 

பயிருக்குப் பொருந்திய மழையைப் போலவும், பிரதிதினமும் விரும்பிய ஒரு பொருளானது கையில் வந்து கிட்டின மார்க்கத்தைப் போலவும், சீக்கிரத்தில் சென்று அந்த ஹிறாமலையினது உச்சியில் தங்கியிருக்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்தில் அணுகினார்கள்.

 

1327. திண்ணிய பெருஞ்சிறைச் செபுற யீல்வரை

     நண்ணிய முகம்மதை யடுத்து நன்குறா

     தெண்ணமென் னுமக்கென வியம்பி யாவர்க்கு

     முண்மைநீர் நபியென்ப துரைத்துப் போயினார்.

32

      (இ-ள்) அவ்வாறு சென்று அணுகின வலிமையுற்ற பெரிய சிறகுகளையுடைய ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் அந்த ஹிறாமலையின் கண் பொருந்திய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நெருங்கி நன்மையுறாத சஞ்சலமான எண்ணமானது உங்களுக்கு ஏனென்று கூறி நீங்கள் எல்லா ஜனங்களுக்கும் நபியென்று சொல்லுவது சத்தியமென்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டும் ஆகாயத்தின்கண் போயினார்கள்.

 

1328. தன்னுடற் குயிரெனுந் தகைமைத் தாகிய

          பொன்னகர்க் கிறைசொலும் புனித வாசகங்

     கன்னலஞ் சுவையினுங் கனிந்த பாகென

           நந்நபி செவிப்புக நடுக்க நீங்கினார்

33

      (இ-ள்) தங்களின் சரீரத்திற்கு ஜீவனென்று சொல்லும் தகைமைத்தான சொர்க்கலோகத்திற் கதிபராகிய ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் அவ்வாறு சொல்லும் பரிசுத்தமான வார்த்தைகளானவை அழகிய கரும்பினது மதுரத்திலும் அதிகமாய்க் கனியப் பெற்ற சர்க்கரையைப் போல நன்மை பொருந்திய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் காதுகளிற் போய் நுழையவே, தங்களுக்கிருந்த பயங்கரத்தை விட்டும் நீங்கினார்கள்.

 

1329. சகமதில் தீன்பயிர் தழைப்பத் தூநெறி

     முகம்மதின் றிருப்பெயர் வளர மாசிலாப்

     புகழொடுஞ் சபுறயீல் போற்றி யிம்மொழி

     யிகலறப் பலதர மியம்பிப் போயினார்.

34

      (இ-ள்) அன்றியும், ஜிபறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் இப்பூமியின்கண் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரானது வளரவும், பரிசுத்தமான சன்மார்க்கத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது திருநாமம் ஓங்கவும், குற்றமற்ற கீர்த்தியுடன் புகழ்ந்து இந்த