பக்கம் எண் :

சீறாப்புராணம்

508


முதற்பாகம்
 

வார்த்தைகளைப் பகைமையறும் வண்ணம் பல தனவை சொல்லிப் போயினார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1330. முருகுண் டறுகாற் சஞ்சரிக

         முரலும் புயத்தா ருசைனயினா

     ரருமைத் தவத்தால் வந்துதித்த

         அபுல்கா சீம்தன் செழுங்கரம்போற்

     பெருகத் தருஞ்செல் லினக்குலங்கள்

          பிறங்கும் பிறங்க லிடத்திருந்த

     வரிசை நபியை நோக்கிப்பின்னும்

          வந்தார் வானோர் கோமானே.

35

      (இ-ள்) அவ்வாறு போன தேவர்களின் அரசராகிய ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் மறுத்தும் ஆறு பாதங்களையுடைய தேனீக்கள் மதுவையருந்தி ஒலியா நிற்கும் மலர் மாலையணிந்த தோள்களையுடைய ஹூசைன் நயினாரவர்களின் தவத்தினால் இவ்வுலகத்தின்கண் வந்து தோற்றிய அருமையையுடைய இந்நூலின் கொடைநாயகர் அபுல்காசீம் மரைக்காய ரவர்களின் செழிய கையைப் போல அதிகமாய்த் தரா நிற்கும் மேகத்தின் இனமான கூட்டங்கள் பிரகாசிக்கும் அந்த ஹிறாமலையின் கண்ணிருந்த சங்கையையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து வந்து சேர்ந்தார்கள்.

 

1331. கலன்சூழ் கிரண மணிநாப்ப

          ணிருந்த கதிர்மா மணிக்குறைசிக்

     குலஞ்சூழ் வரிசை நபிக்கமரர்

          கோமான் சலாமுன் கூறியபி

     னிலஞ்சூழ் பரவைப் புறப்புவியு

          மிறைஞ்ச நெடியோன் றிருவருளாற்

     சொலுஞ்சூ றத்தில் முஸம்மிலெனுஞ்

          சுருதி வசன மிறங்கினவே.

36

      (இ-ள்) அவ்விதம் வந்த அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் ஆபரணங்களில் வளைந்த பிரகாசத்தையுடைய இரத்தின வர்க்கங்களினது மத்தியில் இருக்கப் பெற்ற கிரணங்களையுடைய மாணிக்கத்தைப் போலக் குறைஷிகளினது கூட்டங்கள் வளைந்த சங்கையை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு ஸலாம் சொல்லிய பிற்பாடு, இந்தப் பூமியைச் சூழப்பெற்ற சமுத்திரத்தினது புறப்புவியும் வணங்கும் வண்ணம் மனத்தளவிற் கெட்டாத நெடியவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின்