பக்கம் எண் :

சீறாப்புராணம்

54


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், விதியவனான ஹக்கு சுபுகா னகுவத்த ஆலாவானவன் பிரகாசத்தினது சொரூபமே சிந்த நின்ற ஹபீபாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் திருமேனியை வகுக்க வேண்டி விரைவாய் ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்களை மண்ணெடுத்துக் கொண்டு வாருமென்று கற்பித்தான். தேவர்களான மலாயிக்கத்துமார்களின் அதிபராகிய அந்த ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்களும் புகழ்பெற்ற திரு மதீனமா நகரத்தில் பரிசுத்தத்தைக் கொண்ட ஒப்பற்ற ஒரு தானத்தில் பிரசன்னமாய் இனிமை பொருந்தும் வண்ணம் மண்ணை எடுத்துக்கொண்டு போனார்கள்.

 

102. திறலுறு ஜபுற யீல்தன் றிருக்கையி லேந்திப் போந்த

    பிறுதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னி

    னறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத்

    துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே.

4

      (இ-ள்) வல்லமையைக் கொண்ட ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்கள் தங்களின் தெய்வீகந் தங்கிய கரத்தில் அவ்வாறு தாங்கிக் கொண்டுபோன அம்மண்ணைப் பெருமையிற் சிறந்தோர்கள் பெறா நிற்கும் பதியாகிய சுவர்க்கலோகத்தில் வாசனை மலர்ந்த நீரினது இனிமையானது எந்நாளும் நீங்காத துறைகளானவை விரியப்பெற்ற ஆறுகளெல்லாவற்றிலும் பிரகாசிக்கும்படி கழுவினார்கள்.

 

103. வரிசையும் பேறும் வாய்ந்த முகம்மது நயினார் தோற்றந்

    தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லி

    யரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப்

    பெரியவன் றிருமுன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே.

5

     (இ-ள்) அன்றியும், அஜ்ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்கள் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் அனைவருக்கும் வரிசையும் பேறும் சிறக்கப் பெற்ற நயினாராகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தோற்றமானது விளங்கும்படி சிறப்பாகச் சோபனங்கூறி அருமையான தங்களின் சரீரமானது பூரிப்புற்று வளர்ந்து மனசின்கண் சந்தோஷம் அதிகரித்துப் பெரியவனாகிய ஜல்ல ஜலாலகு வத்தஆலாவின் அழகிய சந்நிதானத்தில் வைத்தார்கள். பெரிய பிரகாசமானது பிரகாசித்தது.

 

104. மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின்

    வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத்

    தென்னுறு ஜலால்ஜமாலென் றேத்திய திருக்கை யாரத்

    தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் றழைக்க வன்றே.

6