முதற்பாகம்
(இ-ள்) தனக்கு ஒப்பில்லாத பரிசுத்தனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் அவ்வாறு பொருந்திய
கிரணங்களை வீசா நிற்கும் மண்ணை யாவர்க்கும் மூலபிதாவான மனுவாகிய நபி ஆதமலை கிஸ்ஸலா
மவர்களின் முதுகின்கண் ணிருக்கச் செய்து சரீரமானது ஆச்சரியத்தையுற்ற வடிவமாகத் தனது
அழகுபொருந்திய ஜலால் ஜமாலென்று துதிக்கப்பட்ட தெய்வீகந் தங்கிய கைகளினால் பொருந்தும்படி
சிருட்டித்தான்.
105.
மெய்யெழில்
வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதி
லையமற் றெழுந்து
சென்னி மூளையி னவதிரித்து
வையகஞ் சிறப்ப
வானோர் மனங்களிப் பேறி விம்மத்
துய்யநற்
கலிமாத் தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே.
7
(இ-ள்) அவ்வாறு சிருட்டித்துச்
சரீரத்தினது அழகானது சிறக்கும்படி உயிரை விட்டனன். விட்ட சமயத்தில் சந்தேகமின்றி
யெழும்பித் தலையினது மூளையில் தோற்றமாய் இந்தப் பூமியானது சிறக்கவும் தேவர்களான
மலாயிக்கத்துமார்கள் உள்ளத்தின்கண் சந்தோஷமதிகரித்து விம்முதலுறவும், பரிசுத்தமாகிய
நன்மை பொருந்திய கலிமாவை ஓதி அவ்விடத்திலிருந்தது.
106.
உரைதெரி கலிமா
வோதி யோதியங் கிருந்து சீவ
னிருவழி தனி
லிறங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச்
சொரிகதிர்
வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும்
வரியுறு கலிமாத்
தன்னை வளம்பெறக் கண்ட தன்றே.
8
(இ-ள்) அவ்விதம் அர்த்தமானது
விளங்கப்பெற்ற கலிமாவைக் கூறிக் கூறி அவ்விடத்திலிருந்து உயிரானது இரண்டு கண்களிலுமிறங்கி
இருந்த கண்களைத் திறந்து சிந்துகின்ற பிரகாசத்தையுடைய சொர்க்க லோகத்தினது வாயிலின்
மேலாகப் பார்த்து கிரணங்களைச் சொரியாநிற்கும் வரியாய்ப் பொருந்திய கலிமாவை வளம்பெற
நோக்கிற்று.
107.
துண்டத்தி னாவி
தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு
விண்டுரை பகரு
நாவின் மேவியல் ஹம்தை யோதிக்
கொண்டபின்
பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி
யண்டர்நா
யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார்.
9
(இ-ள்) அன்றியும், உயிரானது முகத்தில்
தோற்றமாகத் தும்மலுமுண்டாய்ப் பின்னர் வாயைத் திறந்து வார்த்தைகளைப் பேசும் நாவினால்
அல்ஹம்தைச் சொல்லிக் கொண்ட பிற்றை அதற்குப் பிரத்தி கூறிய குதாவாகிய ஹக்கு சுபுகானகு
வத்த ஆலாவினது தெய்வீகந் தங்கிய வார்த்தையைப் பார்த்துத்
|