பக்கம் எண் :

சீறாப்புராணம்

56


முதற்பாகம்
 

தேவர்களான மலாயிக்கத்துமார்களின் நாயனாகிய அவ்வாண்டவனைத் துதித்து நபி ஆதமலை கிஸ்ஸலா மவர்கள், ஒன்று கூறத் தொடங்கினார்கள்.

 

108. கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாவே நீங்கா

    மணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற்

    பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பா

    யணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார்.

10

     (இ-ள்) இத்தன்மை யென்று கணித்து அளவுபடுத்த முடியாத நாயனே! குதாயே! இரத்தினங்களின் மாறாத பிரகாசத்தை வீசும் சொர்க்க லோகத்தின் வாயிலினது நிலைக்கும் மேல் பாலாய்ப் பணிந்த உனது தெய்வீகந் தங்கிய அபிதானத்தோடு வேறேயொரு அபிதானத்தைத் தகுதியாகச் சமீபித்து வைத்திருக்கும்படி பார்த்தேன். அவர் யாவரென யான் அறியேனென்று கூறினார்கள்.

 

109. மாதர்சூ லகடுட் டோன்றா மனுநெறிஆத மேநின்

    காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளை

    வேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட்

    பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ.

11

      (இ-ள்) அவ்வாறு கூறவே, பெண்களின் கெற்பத்தைக் கொண்ட வயிற்றில் நின்றும் தோற்ற மாகாத மனுவினது நெறியையுடைய ஆதமே! சொல்லக் கேட்பீராக! உமது ஆசையினால் தருகின்ற புத்திரர்களில் ஓர் குழந்தை வேதங்களுக்கெல்லாம் நாயகமாகவும் எவ்விடத்தும் பிரகாசிக்கும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்குத் தீபமாகவும், பிற்காலத்தில் பூலோகத்தினது நபியாய்த் தோன்றும் வண்ணம் சிருட்டித்தேன்.

 

110. கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகி

    லுலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்க

    மலைகட னதிபா தாளம் வானவர் முதலா வும்மை

    நிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே.

12

      (இ-ள்) அன்றியும், வேத சாஸ்திரங்களை யுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் காரணமில்லையானால் பூலோகம், வானலோகம், சூரியன், சந்திரன், பிரகாசிக்கின்ற நட்சத்திரக் கூட்டங்கள், சுவர்க்கலோகம், மலை, சமுத்திரம், ஆறு, பாதாளம், தேவர்கள் முதலாக உம்மையும் நிலையுறும்படி