பக்கம் எண் :

சீறாப்புராணம்

57


முதற்பாகம்
 

சிருட்டிப்பதில்லை யென்று யாவருக்கும் இறைவனான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவானவன் கூறினான்.

 

111. பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ்

    சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர்

    வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத்

    தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே.

13

      (இ-ள்) கடவுளாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை வணங்கித் துதித்து அன்பு பெற்றிருந்த மூலபிதாவான நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்களின் தலையின் கண்ணிருந்த ஜீவனானது சரீரத்தினிடத்துப் பூரணப்பட்ட பின்னர் வரத்தினால் உயர்ச்சியுற்ற அழகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இப்பூலோகத்தில் அவதரிக்கும் வண்ணம் தங்கிய பெரிய ஒளிவுக்கு அந்தச் சந்திரனது கலைகளும் மழுங்கா நிற்கும்.

 

112. உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்வி

    மடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காக

    வடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கே

    யிடமுறு மமரர் யாரும் சுசூதுசெய் திடுக வென்றான்.

14

      (இ-ள்) தேகமானது தங்கப்பெற்று ஜீவனுண்டென்று கூறும் ஒப்பற்ற சொரூபமில்லாதவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் அழகிய இதழ்கள் அவிழ்ந்த தாமரை மலர்போலுந் திருவடிகளையுடைய நாயகம் நபிகட் பெருமானார் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது ஒளிவுக்காக வல்லமையைக் கொண்ட மானுஷீகர் அனைவர்க்கும் அதிபதியாகிய நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்களுக்கு ஆகாய லோகத்தின் கண் பொருந்திய தேவர்களான மலாயிக்கத்துமார்க ளனைவர்களையும் சுஜூது செய்வீர்களாகவென்று கற்பித்தான்.

 

113. தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள்

    காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி

    நேயமுற் றிடப்ப ணிந்து நிரைநிரைக் கைக ளேந்தி

    வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குள் வணக்கஞ் செய்தார்.

15

     (இ-ள்) பரிசுத்தனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் அவ்வாறு கற்பிக்க மலக்குகளான தேவர்கள் அந்தக் கற்பனையை மறுக்காது எழும்பித் தங்களின் சரீரமும் நெஞ்சமும் வார்த்தைகளும் ஒன்றாய்க் கலப்புற்றுச் சந்தோஷமதிகரித்து