முதற்பாகம்
நேசமானது பொருந்தும் வண்ணம் அவ்வாத மலைகிஸ்ஸலா மவர்களை வரிசை வரிசையாய்த் தாழ்ந்து கரங்களை ஏந்தி
வாயினாற் றுதித்துப் புகழ்ந்து வணங்கினார்கள்.
114.
வானவர் செய்யு
மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற்
போனத னால
ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கி
யீனவன் குணத்த
னாயி லகுனத்து முனிவும் பெற்றே
யானவம் பிபுலீ
சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான்.
16
(இ-ள்)
அஜாசீ லென்பவன் தேவர்களாகிய மலாயிக்கத்துமார்கள் அவ்வாறு செய்கின்ற அந்த வணக்கத்தினது
முறைமையாகச் செய்யாமற் போனதினால் தனது பொறையையும் நிறையையும் அறிவையும் போக்கடித்துப்
புன்மையான கொடிய குணத்தையுடையவனாகி லகுனத்தும் முனிவும் பெற்று வீணான இபுலீசென்று கூறும்
நாமத்தையுமடைந்து அலைதலுற்றுப் போனான்.
115.
பொருப்புருக்
கொண்ட தன்ன புயத்தெழி லாதந் தன்னுள்
விருப்பெனும்
போக முற்றி விழைவுபெற் றிடுத லாலே
கருப்பமுற்
பவிக்க வேண்டுங் காரண காட்சி யாக
மருப்புகுங்
குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே.
17
(இ-ள்) அன்றியும், வல்லவனான
ஹக்குசுபுகானகுவத்த ஆலாவானவன் மலைகளானவை ஓர் வடிவத்தை எடுத்தாற்போன்ற தோள்களையுடைய அழகிய
நபி ஆத மலை கிஸ்ஸலாமவர்களி னிருதயத்தின்கண் ஆசையென்னும் விருப்பமானது அதிகரித்து
விழைவைப் பெறுவதினால் கெற்பம் உண்டாக வேண்டுங் காரணத்தினது தோற்றமாக வாசனை புகப்பெற்ற
கூந்தலையுடைய ஹவ்வா அலைகிஸ்ஸலா மவர்களைப் பிறக்கச் செய்தான்.
116.
தேங்கமழ் குழலுஞ்
சோதிச் சிறுபிறை நுதலும் வாய்ப்பப்
பாங்கிருந்
தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கி
யோங்குநின்
பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றா
ரீங்கிவ ணுறைந்த
வண்ண மேதென வாதங் கேட்டார்.
18
(இ-ள்) மூல பிதாவாகிய நபி ஆத
மலைகிஸ்ஸலாமவர்கள் வாசனையானது பரிமளிக்கப் பெற்ற கூந்தலும் பிரகாசத்தைக் கொண்ட
மூன்றாம் நாளினது சந்திரனை நிகர்த்த நெற்றியும் சிறக்கும் வண்ணம் பக்கத்திலிருந்து
அமுதமானது சிந்தாநிற்கும் குளிர்ச்சி தங்கிய வார்த்தைகளையுடைய மங்கையான ஹவ்வா
அலைகிஸ்ஸலாமவர்களைப் பார்த்து உனது நாமத்தைச்
|