பக்கம் எண் :

சீறாப்புராணம்

59


முதற்பாகம்
 

சொல்லென்று சொல்ல ஹவ்வா வென்று கூறினார்கள். நீ இவ்விடத்தில் வந்து தங்கியவிதம் யாதென்று கேட்டார்கள்.

 

117. செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கி

    மவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ள

    வெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின் செல்கென்றா

    னவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால்.

19

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு கேட்க அழகிய வாசனையைக் கொண்ட கூந்தலை உடையவர்களான ஹவ்வா அலைகிஸ்ஸலாமவர்கள் பொருந்திய சிறந்த சன்மார்க்கத்தையுடைய நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்களின் தெய்வீகம் தங்கிய சந்திரனை நிகர்த்த வதனத்தைப் பார்த்து வானலோகம் பூலோகம் மற்றுள்ள யாவற்றையும் சிருட்டித்தவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் என்னைப் படைத்து உங்களிடத்தில் வரும்படி கற்பித்தான். அம்மார்க்கத்தினால் வந்து சேர்ந்தேனென்று தங்களின் அழகானது பிரகாசிக்கின்ற பவளத்தை யொத்த வாயினாற் கூறினார்கள்.

 

118. செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித்

    தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கி

    மைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டு

    துப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே.

20

     (இ-ள்) அவ்வாறு கூறிய வார்த்தைகளை நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று உரோமங்கள் சிலிர்க்கப் பெற்று உடலானது பூரித்து அந்தச் சமயத்தில் இறைவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவைத் துதித்து பீவி ஹவ்வா அலைகிஸ்ஸலா மவர்களைப் பார்த்து மேகங்களானவை படுந் தன்மையைக் கொண்ட கரியகூந்தலையும் இளமயில் போலும் சாயலையுமுடைய அவர்களினது வடிவத்தை மனசின்கண் கொண்டு செந்நிறந் தங்கிய அதரத்தினது அமுதத்தை அனுபவிக்கும் வண்ணம் தீண்டுவதற்கு மனமொன்று பட்டார்கள்.

 

119. பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச்

    சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கி

    நிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன்

    மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே.

21

     (இ-ள்) அவ்வாறு ஒன்றுபட ஹவ்வா அலைகிஸ்ஸலாமவர்கள் நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்களின் சொல்லுதற்கருமையான குணத்தையும் மேலான பரிமளத்தினது