பக்கம் எண் :

சீறாப்புராணம்

562


முதற்பாகம்
 

(இ-ள்) இந்தப்படியாக நடந்து அங்கு இருக்கின்ற நாளில் வருத்தமுற்ற மனத்தைக் கொண்ட இபுனு கலபென்று சொல்லப்பட்டவனான கடுமையையுடையவன் தனது அடிமையாகிய பிலாலென்பவரைப் பார்த்து இவன் மகத்தான அழகனென்று சொல்லி நிந்தித்துக் கோபித்தான்.

 

1481. அடிமைய னறிவில னறியுந் தன்னுரைப்

     படிநட வாமுரண் படித்த வஞ்சன்பொய்

     பிடிபடு முகம்மதின் பேச்சுக் குட்படுங்

     கொடியவ னிவனெனக் கனன்று கூறினான்.

142

      (இ-ள்) அன்றியும், இந்தப் பிலாலென்பவன் அடிமையானவன் அறிவில்லாதவன், அறியா நிற்கும் தன்னுடைய வார்த்தைகளின் வண்ணம் நடவாத விரோதத்தைக் கற்ற வஞ்சகத்தையுடையவன் பொய்மையானது அகப்பட்ட முகம்மதென்பவனின் வார்த்தைகளுக்கு உட்படும் கொடுமையுடையவனென்று கோபித்துச் சொன்னான்.

 

1482. மாயவஞ் சனைத்தொழின் முகம்ம தின்வயின்

     போயிசு லாமினிற் புகுந்த தென்னெனக்

     காயெரி நிலத்திடைப் படுத்திக் கல்லெடுத்

     தேயவ னுரத்தினி லிருத்தி னானரோ.

143

      (இ-ள்) அவ்வாறு சொன்ன அந்த இபுனுகலபென்பவன் பிலாலென்பவரைத் தந்திரத்தைக் கொண்ட வஞ்சனைச் செயலையுடைய அந்த முகம்மதினிடத்தினிற் சென்று அவனது இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்து கொண்ட காரணம் யாதென்று சொல்லிக் காய்ந்த அக்கினியையுடைய பூமியின்கண் கிடக்கும்படி செய்து ஒரு கல்லைத் தூக்கிப் பொருந்திய அவரின் மார்பில் இருத்தினான்.

 

1483. படருல முரத்தினிற் பதியப் பார்க்கரன்

     சுடுகதிர் நிலத்திடைச் சோர்ந்து மூச்செறிந்

     துடலுலைந் துள்ளுயி ரொடுங்குங் காலையி

     லிடர்தவிர்த் திருவிழி யெரிய நோக்குவான்.

144

      (இ-ள்) அவ்விதம் இருத்திய விரிந்த கல்லானது மார்பில் அழுந்தவே பிலாலென்பவர் சுடா நிற்கும் சூரியனின் கிரணங்களையுடைய பூமியின்கண் வாட்டமடைந்து பெருமூச்செறிந்து சரீரமானது உலையப் பெற்று உள்ளேயுள்ள ஜீவனானது ஒடுங்குகின்ற சமயத்தில், அந்த இபுனுகலபென்பவன் தான் செய்யும் துன்பங்களை யொழித்து இரண்டு கண்களிலும் அக்கினியானது எரியும் வண்ணம் பார்ப்பான்.