பக்கம் எண் :

சீறாப்புராணம்

581


முதற்பாகம்
 

(இ-ள்) உமறென்பவர் இந்தப்படியாகச் சூரியன் உதயமாகு முன்னர் தொட்டு அசறு வரைக்கும் அலைந்து உலைந்து வசக்கேடாகி மிகவும் தவிப்புற்று அக்காளைமாடானது கலைந்து நம்மைவிட்டு மொழிந்ததேயல்லாமல் நம்மிடம் அகப்படவில்லையே யென்று சொல்லிக் கலக்கமடைந்து தடுமாற்றமுறாத தமது மனமானது சுழலும் வண்ணம் தடுமாற்றமுற்றார்.

 

1540. மட்டு வார்பொழி னெறியிடை மழவிடை யெதிர்ந்து

     வெட்டு மென்றுரை பகர்ந்ததும் வெகுளியி னடந்து

     பட்ட செய்தியும் புதுமையு மூரவர் பலர்க்கும்

     விட்டு ரைத்திட வேண்டுமென் றெழுந்தனர் விரைவின்.

38

      (இ-ள்) அவ்வாறு தடுமாற்ற முற்ற உமறென்பவர் தேனானது ஒழுகா நிற்கும் சோலைகளையுடைய பாதையின்கண் இளம் பருவத்தையுடைய காளைமாடானது எதிர்த்து வெட்டுமென்று வார்த்தைகள் சொன்னதையும் கோபத்தோடும் சென்று தாம்பட்ட சமாச்சாரத்தையும் அதனாலுண்டான ஆச்சரியத்தையும் தமது ஊராகிய திருமக்கமா நகரத்தை யுடையவர்களான காபிர்கள் பலருக்கும் பிரித்துச் சொல்ல வேண்டுமென்று சீக்கிரமாய் எழும்பினார்.

 

1541. குறித்து வந்தவை விடுத்தெழு முமறினைக் கூவித்

     தெறித்த நுண்டுளி முகிற்குடை முகம்மதைச் செகுப்ப

     வெறித்த வெஞ்சின வீரத்தின் விழைவுக ளனைத்து

     மறைத்தி ரோவெனப் புகன்றுபோ யதுமழ விடையே.

39 

      (இ-ள்) அப்போது இளம் பருவத்தையுடைய அந்தக் காளை மாடானது மனசின்கண் குறிப்பிட்டு வந்தவைகளைவிட்டு எழா நிற்கும் உமறுகத்தாபைக் கூப்பிட்டு நுண்ணிய திவலைகள் தெறிக்கும் மேகக்குடையை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கொலைசெய்யும் வண்ணம் ஆவேசமாகிய வெவ்விய கோபத்தைக் கொண்ட வீரத்தினது ஆசைப் பெருக்கங்க ளெல்லாவற்றையும் மறையச் செய்தீரோ? என்று சொல்லிப் போயிற்று.

 

1542. கொண்ட வேகமும் வீரமும் புறந்தலை குனியக்

     கண்ட காரணத் தொடுமிளைப் பருநெறி காட்ட

     விண்டு திர்த்தமெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து

     மண்டு பேரவை யபூசகு லிடத்தில்வந் தனரே.

40

      (இ-ள்) அந்தக் காளை மாடானது அவ்வாறு போகவே உமறுகத்தா பென்பவர் தாம் கொண்ட கோபமும் வீரமும்