முதற்பாகம்
பின்னால் தலை
தாழும் வண்ணம் கண்களினாற் பார்த்த காரணத்துடன் தம் மெலிவானது அரிய பாதையைக் காட்டும்படி
வேறுபட்டு உதிர்க்கப் பெற்ற சரீரத்தின் வேர்வையோடும் பையப் பைய நடந்து நெருங்கிய பெரிய
சபையையுடைய அபூஜகிலிடத்தில் வந்து சேர்ந்தார்.
1543.
முகம
லர்ச்சிகெட் டறத்தவித் துடல்வெயர் முழுகப்
பகும னத்தும
றடைந்தவை யனைவரும் பார்த்து
முகம்ம தின்வயி
னடைந்தது நடந்ததும் வகுத்துப்
புகர றும்புக
ழோயுரை யெனப்புகன் றனரே.
41
(இ-ள்)
பிரிவைக் கொண்ட மனத்தை யுடைய உமறென்பவர் அவ்விதம் சந்தோஷமற்று மிகவும் தவிப்புற்று
வெயர்வையினால் சரீரமானது முழுகும் வண்ணம் அங்கு வந்து சேர்ந்தவைகளை யாவர்களும் பார்த்துக்
குற்றமற்ற கீர்த்தியை யுடையவரே! நீவிர் முகம்மதென்பவனிடத்தில் போனதையும் அங்கு
நடந்ததையும் வகைப்படுத்திச் சொல்லு மென்று கேட்டார்கள்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
1544.
அறபிகள் குழுவி னாப்ப ணமரபூ சகுலை நோக்கிப்
பொறைமதக்
கரிகோ டேற்ற புரவல ருயிரை மாந்திக்
கறைகெழுங் குருதி
வைவேற் காவல ருமறு கத்தாப்
மறைபடா
நெறியிற் கண்ட புதுமையை வகுக்க லுற்றார்.
42
(இ-ள்)
அவர்கள் அவ்வாறு கேட்கவே, மதத்தைக் கொண்ட கொம்புகளை யுடைய மலைபோன்ற யானைகளின் மீது
பொருந்திய அரசர்களின் ஆவியைக் குடித்து இரத்தக் கறை நிறைந்த கூர்மை தங்கிய வேலாயுதத்தை
யுடைய இராஜரான உமறுகத்தா பென்பவர் அறபிகளான காபிர்களின் கூட்டத்தினது மத்தியில்
உறைந்திருக்கும் அபூஜகிலைப் பார்த்துத் தாம் பாதையின்கண் மறைவுபடாது தமது கண்களினாற்
பார்த்த அற்புதத்தை வகுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
1545.
மண்ணினிற்
றிசையிற் சூழ்ந்த மறிதிரைக் கடற்குள் வானோர்
விண்ணினிற்
பெரியோ ராய்ந்த மெய்மறை தனக்குட் டேர்ந்த
திண்ணிய
ருரைக்குட் கேட்ட திலைமனந் தெளிய வென்றன்
கண்ணினிற் கண்ட
தியாருங் காணொணாப் புதுமை யென்றார்.
43
(இ-ள்)
இப்பூமியின் கண்ணும் திசைகளிலும் பூமியை வளைந்த மடங்கா நிற்கும் அலைகளையுடைய
சமுத்திரத்தினுள்ளும் தேவர்களான மலாயிக்கத்துமார்களின் ஆகாயத்திலும் மேன்மையை
யுடையவர்களால் ஆராயப் பெற்ற
|