பக்கம் எண் :

சீறாப்புராணம்

584


முதற்பாகம்
 

(இ-ள்) ஆனால், அந்தக் காளை மாடானது காற்றைப் போலப் பறக்கும். வடவாமுகாக்கினியைப் போலச் சீறும். கொல்லா நிற்கும் எமனைப் போல எதிர்க்கும். மேகங்களை யுடைய மேன்மை கொண்ட மலைகளெல்லாவற்றையும் சுற்றும். கட்பார்வைக்குத் தோற்றாது ஆகாயத்தின்கண் தாவும். சுழலா நிற்கும் மண்ணினது சக்கரத்தைப் போலக் கோபமுற்று நெருங்கிப் பின்னாலும் முன்னாலும் திரியும்.

 

1549. அலகையின் குலமோ வானி னமரரி லொருவன் றானோ

     வுலகுறுஞ் சின்னோ தெய்வ முருவெடுத் ததுவோ செவ்விச்

     சிலைநுதல் கதீசா கேள்வன் செய்தொழில் வஞ்சந் தானோ

     நிலமிசை விடையாய்த் தோன்றி நின்றவம் மாயந் தானே.

47

      (இ-ள்) ஆதலால் இப்பூமியின்கண் காளை மாடாக உதயமாகி நின்ற அந்த மாயமானது பைசாசங்களின் குலத்திலுள்ளதோ? அல்லது வானலோகத்தின் கண்ணுள்ள தேவர்களான மலாயிக்கத்து மார்களிலொருவனோ? இவ்வுலகத்தின்கண் பொருந்திய ஜின்னோ? தெய்வமானது உருவெடுத்த தோற்றமோ? அழகிய வில்லைப் போலும் நெற்றியை யுடைய கதீஜாவென்பவளின் நாயகனான முகம்மது செய்யா நிற்கும் வஞ்சனைத் தொழிலோ? இவற்றில் இன்னதென்று யானறியேன்.

 

1550. மாற்றுரை வேதம் பேசு முகம்மதைத் தேடிச் செல்லு

     மாற்றிலிவ் விடையைக் கண்டே னசறுமட் டாகக் கண்ணிற்

     றோற்றிடாத் துன்ப முற்ற புதுமையைத் தொகுத்து வல்லே

     சாற்றுதற் கமைந்தேன் வீரந் தனைமறுத் திலனியா னென்றார்.

48

      (இ-ள்) ஆனால் யான் மாறுபாடான வார்த்தைகளைக் கொண்ட வேதத்தைச் சொல்லும் முகம்மதென்பவனை நாடிச் செல்லுகின்ற பாதையின்கண் இந்தக் காளை மாட்டைப் பார்த்து அசறுவரையும் கண்களில் தோற்றாத வருத்தத்தை யடைந்த ஆச்சரியத்தை ஒழுங்காய் உங்களிடத்திற் சொல்லுவதற்காகச் சீக்கிரமாய் இங்கு வந்து பொருந்தினேன். எனது வீரத்தை யான் மறுத்திலேனென்று சொன்னார்.

 

1551. கொடுவரி யனைய கத்தாப் குமரரீ துரைப்பக் கேட்டு

     விடமெனக் கறுத்துச் சிந்தை விறலபூ சகுலுஞ் சுற்றி

     யுடனிருந் தவருந் தம்மி லொண்புயங் குலுங்க நக்கி

     யடலுறு முமறு கத்தா பணிமுக நோக்கிச் சொல்வார்.

49

      (இ-ள்) வேங்கையை நிகர்த்த கத்தாபென்பவரின் புதல்வரான உமறென்பவர் அவ்வாறு சொல்ல வலிமையை யுடைய அபூஜகி