முதற்பாகம்
1572.
படித்தசொ லியாது
வேறு பகர்ந்தவ ரெவர்கொ லென்ன
வடித்தடங்
கதிர்வேன் மைக்கண் மடமயின் மறைத்துக் கூறக்
கடத்தடக் கரத்து
வேழக் காவலர்க் கசனி யெப்பார்
பிடித்தசொற்
றனைம றாது விருப்புற்றுப் பின்னுங் கேட்டார்.
70
(இ-ள்)
அவ்வாறு கேட்கவே அதற்குக் கூர்மை தங்கிய பெருமையான பிரகாசமமைந்த வேலாயுதம் போலும் மையுண்ட
கண்களையுடைய பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் இங்கே படித்த சொல்லானது யாது? அதைப்
படித்தவர் வேறே யாவர்? ஒருவரு மில்லரென்று மறைத்துச் சொல்ல, பின்னரும் உவகையுற்று மதத்தைப்
பெற்ற பெரிய துதிக்கையையுடைய யானைகளினது இராஜர்களுக்குச் சிங்கத்தை நிகர்த்தவரான
உமறுகத்தா பென்பவர் தாம் பிடித்த வார்த்தையை மறுக்காது கேட்டார்.
1573.
உடன்பிறந்
திகலா நின்ற வுமறெனு முயிரை நோக்கி
மடந்தையர் திலக
மன்ன பாத்திமா மணிவாய் விண்டு
திடந்தவ ழுண்மை
வேதந் தெளிந்தசொல் லதனைத் தீனைக்
கடந்தவர் புனித
மில்லார் கரத்தளித் திடறீ தென்றார்.
71
(இ-ள்)
அவ்விதம் கேட்கவே பெண்களுக்குத் திலகத்தை யொத்த பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள்
தம்முடன் அவதரித்து விரோதிக்கின்ற உமறென்பவரைப் பார்த்துத் தங்களின் அழகிய வாயைத்
திறந்து வலிமையானது தவழுகின்ற சத்தியத்தையுடைய புறுக்கானுல் அலீமென்று சொல்லும் வேதத்தினது
தெளிந்த வார்த்தைகளை அவ்வார்த்தைகளுக்குக் குரிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை
விட்டும் தாண்டினவர்களான பரிசுத்த மற்றவர்களின் கைகளில் கொடுப்பது குற்றமென்று
சொன்னார்கள்.
1574.
முன்னவள்
கனிவாய் விண்டு மொழிந்தசொன் மனத்துட் கொண்டு
மன்னவ னபுல்கா
சீந்தன் மனத்தொளி வதனின் மிக்காப்
பன்னருஞ் சிறப்பு
வாய்ந்த பங்கய வாவி நண்ணித்
தென்னுறு
கதிர்வேற் சிங்கஞ் சீதநீ ராடி னாரால்.
72
(இ-ள்)
அவ்வாறு தமது தமக்கையாரான பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் தங்களின் கொவ்வைக் கனி
போன்ற வாயைத் திறந்து சொல்லிய வார்த்தைகளை அழகிய பிரகாசந் தங்கிய வேலாயுதத்தையுடைய
சிங்கமாகிய உமறென்பவர் தமது மனசினகம் கொண்டு இராஜரான இந்நூலின் கொடைநாயகர் அபுல்
காசீம் மரைக்காய ரவர்களின் மனத்தெளிவிலும் மிகுந்த தெளிவாய்ச் சொல்லுதற்கரிய வரிசை
|