பக்கம் எண் :

சீறாப்புராணம்

619


முதற்பாகம்
 

குற்றமறும் வண்ணம் தங்களின் மனதின்கண் ஆராய்ந்து அறியுங்களென்று சொல்லிப் பின்னரும் சில வார்த்தைகளைச் சொன்னான்.

 

1646. பெருந்தவத்தால் வரும்புகழோய் தனியிறைவ

         னொருவனெனப் பெருக்கும் பேச்சு

     மிருந்தமறை யனைத்தையும்விட் டெனதுமொழி

         மறைமொழியென் றிசைக்கும் வாக்குந்

     திருந்துநெறி புதுநெறியொன் றுளதெனமுன்

         னெறிவழுவாய்ச் செப்பு மாறும்

     வருந்தமர்க்குந் திசையோர்க்கு மறையோர்க்கு

         மனம்பொருத்த மன்று தானே.

9

      (இ-ள்) பெரிய தவத்தினால் இவ்வுலகத்தின்கண் அவதாரமாய் வந்த கீர்த்தியையுடைய முகம்மதானவர்களே! நீங்கள் ஒப்பற்ற இறைவனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவானவன் ஒருவனென்று அதிகப்படுத்துகின்ற வார்த்தைகளும் இருக்கப் பெற்ற வேதங்களெல்லாவற்றையும் ஒழித்து என்னுடைய வார்த்தைகள் வேதவார்த்தைகளென்று சொல்லுகின்ற வார்த்தைகளும் யாவர்களும் செவ்வைப்படும் மார்க்கமானது நூதனமாகிய ஒரு மார்க்கமுண்டென்று முன்னேயுள்ள மார்க்கத்தைக் குற்றமாகச் சொல்லுகின்ற உத்தரமும் இப்போது இருப்பவர்களே யல்லாமல் இனிமேல் வரா நிற்கும் நமது பந்துக்களுக்கும் எண்டிசைகளிலுள்ளவர்களுக்கும் வேதியர்களுக்கும் மனப்பொருத்தமில்லை.

 

1647. ஒருவனென வுரைத்தீரிந் நிறத்தனிவ

         னுளனெனக்கண் ணுறச்செய் தீரிற்

     றிருவணக்க மெனத்தொடுத்தீர் முகங்கைகா

         றனைத்தோய்த்தோர் திசையை நோக்கித்

     தரையினுத றைவரலா யடிக்கடித்தாழ்ந்

         தெழுந்திருகை தன்னை யேந்தி

     வருவதலா லொருகுறிப்பு மிலையெவர்க

         ளிவ்வணக்கம் வணங்கி னோரே.

10

      (இ-ள்) அன்றியும், கடவுள் ஒருவனென்று சொன்னீர்கள் அக்கடவுள் இன்ன நிறத்தையுடையவன். இன்னவன் இங்கேயுள்ளவனென்று கண்களினாற் பார்க்கும்படி செய்தீர்களில்லை. மேலும் தெய்வீகம் பொருந்திய தொழுகையென்று ஒரு தொழுகையைப் பொருத்தினீர்கள். முகத்தையும் கைகளையும் கால்களையும் நனைத்து ஒரு திசையைப் பார்த்து பூமியின்கண் நெற்றியானது தடவும்படியாக அடிக்கடி தாழ்ந்து எழும்பி இரண்டு கைகளையும் ஏந்தி வருவதே