முதற்பாகம்
யல்லாமல் யாதொரு
குறிப்புமில்லை. இந்தத் தொழுகையைத் தொழுதவர்கள் வேறே யாவர்? ஒருவருமில்லர்.
1648.
முதலவன்றன்
றிருத்தூத ரெனப்பேரிட்
டரியமறை
மொழியென் றேத்திப்
புதியமொழி
யுரைத்தீமான் கொள்வித்தீ
ரிசுலாமிற்
புக்க பேரி
லிதமுறநம்
மிறைவனிவ னெனக்கண்டோ
மெனவுரைத்தோ ரில்லை மேலும்
பதவியுள வெனிலதுவு
மெவரறிவர்
சரதமெனப்
பருதி வேலோய்.
11
(இ-ள்)
அன்றியும், சூரியனையொத்த வேலாயுதத்தை யுடையவர்களே! யான் யாவற்றிற்கும் முதன்மையனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் றசூலென்று ஒரு நாமத்தைச் சூட்டி நூதனமாகிய வார்த்தைகளைச் சொல்லி இது
அருமையான வேதவார்த்தைகளென்று கூறித் துதித்து ஜனங்களை யுங்களுக்கு ஈமான் கொள்ளும்படி
செய்தீர்கள். ஆனால் அவ்விதம் ஈமான் கொண்டு உங்களுடைய தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்தில் நுழைந்த ஜனங்களில் நமது இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் இவன்
தானென்று இனிமை யுறும்வண்ணம் பார்த்தோமென்று சொன்னவர்களில்லர். மேலும் முத்தி யுண்டென்று
சொன்னால் அதையும் சத்தியமென்று அறியப்பட்டவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.
1649.
மந்திரமொன்
றுருவேற்றிக் கண்கட்டா
யுடும்பினொடும் வசனித் தோமென்
றந்தரத்தைக்
காரணமாய் விளைவித்தீர்
விச்சையலா
லருளோ நாளும்
புந்தியினிற்
சிறியோர்க ளறியாது
மயக்குறுவர்
பொருவி லாத
தந்திரமும்
மறையோர்க ளிதனையொரு
பொருளாகச்
சார்ந்தி டாரே.
12
(இ-ள்)
அன்றியும், ஒரு மந்திரத்தை உருவேற்றிக் கண்கட்டாக உடும்போடும் பேசினோமென்று அந்தரத்தைக்
காரணமாக விளையச் செய்தீர். இது வித்தையே யல்லாமல் தெய்வகிருபையோ? அல்ல, சிறியவர்கள்
தங்களின் புத்தியின்கண் அறியாமல் பிரதிதினமும் மயக்கமடைவார்கள். இதை ஒப்பற்ற
தந்திரத்தை யுடைய மூன்று வேதங்களையும் கற்றறிந்த வேதியர்கள் ஒரு பொருளாகப்
பொருந்தார்கள்.
|