முதற்பாகம்
1650.
குலத்தினுக்கு
மரசருக்கு முதியோர்க்கு
மறையோர்க்குங் கோதி லாதித்
தலத்தினுறை
குபலெனுமத் தம்பிரான்
றனக்குமெந்தச் சமயத் தோர்க்கு
நலத்தகைமைத்
தலக்கேடும் பிறர்சூடும்
பெரும்பகையு
நடவா முன்ன
மிலத்தொடொழு
கினத்தொடுறைந் திவைதவிர்வெண்
ணிணம்பருகி
யிலங்கும் வேலோய்.
13
(இ-ள்)
ஆதலால் வெண்ணிறத்தையுடைய நிணத்தைப் புசித்துப் பிரகாசிக்கும் வேலாயுதத்தை யுடையவர்களே!
நமது குலத்திலுள்ளவர்களுக்கும் இராஜர்களுக்கும் முதுமையையுடையவர்களுக்கும் வேதியர்களுக்கும்
குற்றமில்லாத இந்தப் பூமியின்கண் தங்கிய குபலென்று சொல்லும் அந்தத் தம்பிரானுக்கும்
எச்சமயத்தார்க்கும் நல்ல தகைமையினது தலக்கேடும் அன்னியர்கள் சூடா நிற்கும் பெரிய
விரோதமும் நடக்கிறதற்கு முன்னர் நீங்கள் இவ்விடத்தோடும் ஒழுகா நிற்கும் பந்துக்களோடும்
தங்கி இவைகளைத் தவிர்த்து விடுங்கள்.
1651.
தந்தைதாய்
தமர்வணக்க முறையொழுகிப்
பழையமறை
தழுவி னீரேல்
வந்தமா
வினைநீங்கு மினத்தோர்க
ளெவருமன மகிழ்ச்சி யாகிக்
கந்தடர்வெங்
கரியிரதம் பரிநெருங்கப்
படைசூழக்
கவிகை யோங்க
விந்தமா
னிலத்தரசா யிறைஞ்சுவது
சரதமென
வியம்பி னானால்.
14
(இ-ள்)
அன்றியும், பிதாமாதா பந்துக்களாகிய இவர்களின் வணக்கத்தினது ஒழுங்காய் நடந்து பழைய
வேதத்தை ஏற்றுக் கொண்டீர்களே யானால் இப்போது வந்திருக்கப் பெற்ற பெரிய வினையானது
அகலும். மேலும் குடும்பத்தார்கள் யாவர்களும் மனக்களிப்பாகிக் கட்டுத்தறியை யடரா நிற்கும்
வெவ்விய யானை, தேர், குதிரையான இவைகள் நெருங்கவும், சேனைகள் சூழவும், கொற்றக்குடையானது
ஓங்கவும் தங்களை இந்தப் பெருமை பொருந்திய பூமிக்கு இராஜராக வணங்குவது சத்தியமென்று
சொன்னான்.
1652. அச்சமணு விலதகத்தி னுத்துபா
வுரைத்தமொழி யனைத்துங் கேட்டு
முச்சகமும்
புகழ்முகம்ம துறசூல்தம்
மிதழினிற்புன் முறுவ றோன்றி
|