பக்கம் எண் :

சீறாப்புராணம்

623


முதற்பாகம்
 

     யிருமையிலுங் கதிதருநும் புதுமொழியை

         யெனதுசெவிக் கியைவ தாக

     வுரையுமென வெடுத்துரைத்தா னிறபியா

         தரும்புதல்வ னுத்து பாவே.

17

      (இ-ள்) முத்தினது பிரகாசத்தில் நின்று வடிவமாக அவதரித்த நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்வார்த்தைகளைச் சொல்ல றபியாவென்பவன் தந்த புத்திரனாகிய உத்துபாவென்பவன் தனது காதுகளினாற் கேள்வியுற்று ஓங்கா நிற்கும் முதன்மையான முன்னுள்ள வேதவாக்கியங்கள் எல்லா உலகங்களிலும் அறிந்தவைகள் தாம். ஆதலால் அவற்றை யான் சொல்லுவதினால் என்ன பிரயோசனம்? ஒன்றுமில்லை. இம்மை மறுமையென்னும் இரண்டிலும் பேற்றைத் தரா நிற்கும் உங்களுடைய நூதனமாகிய வேத வசனத்தை எனது காதுகளுக்குப் பொருந்தும் வண்ணம் சொல்லுங்க ளென்று எடுத்துச் சொன்னான்.

 

1655. ஆதிதனை யுளத்திருத்தி பிசுமிலெனு

         முரைதிருத்தி யமுத மூறும்

     வேதமெனும் புறுக்கானி லொருசூறத்

         தெடுத்தோதி விரிவதாகப்

     போதமுறு முபனிடதப் பொருளனைத்துந்

         தொகுத்துரைத்தார் பொருவி லாத

     சீதரவொண் கவிகைநிழ றனினுலகம்

         புரந்தளிக்குஞ் செவ்வி யோரே.

18

      (இ-ள்) அவன் அவ்வாறு சொல்லவே ஒப்பற்ற பிரகாசத்தையுடைய மேகக் குடையினது நிழலின்கண் இவ்வுலகத்தைக் காத்து இரட்சிக்கும் செவ்வியரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் யாவற்றிற்கும் முதன்மையனாகிய ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவினது நாட்டத்தை மனத்தின்கண் இருக்கும்படி செய்து ழுபிஸ்மில்லா ஹிற்றஹ்மா னிற்றஹீம்ழு என்னும் வார்த்தையைத் திருத்தமாக ஓதி அமுதமானது சுரக்கா நிற்கும் வேதமென்று சொல்லும் புறுக்கானில் ஒரு சூறத்தை யெடுத்துச் சொல்லி விரிவாக அறிவானது பொருந்திய அதினுட் பொருள்க ளெல்லாவற்றையும் அளவுபடுத்திச் சொன்னார்கள்.

 

1656. இரவியெனுங் கலிமாவிற் குபிர்த்திமிர

         மடர்த்தெறியு மிறசூ லுல்லா

     தெரிமறையி னுரைகேட்டுப் பொருடேர்ந்து

         பகுப்பவதி சயித்து நோக்கி