முதற்பாகம்
1665.
அற்றையினி லிரவகற்றி யறிவினா
லுயர்ந்தோரை யாவி போலு
முற்றவரை
மதிக்கேற்ப வுரைகொடுக்குந்
திறத்தவரை
யுறவி னோரை
வெற்றியொடு
மினிதழைத்தங் கோர்மாடத்
திடத்திருத்தி வியந்து நோக்கிக்
குற்றமற அபூசகல்த
னுளத்தினுறும்
வரவாறு கூற
லுற்றான்.
7
(இ-ள்)
அவ்வாறு போய் நுழைந்தவனான அந்த அபூஜகிலென்பவன் அன்றைய தினத்தின் இராப்பொழுதை யொழித்து
மறுநாள் புத்தியினால் உயர்ச்சி யுற்றவர்களையும் தனது ஜீவனைப் போலும் பொருந்தினவர்களையும்
தனது புத்திக்கு இசையும் வண்ணம் பதிற்பேசும் வல்லமை யுடையவர்களையும் தனது குடும்பத்தார்களையும்
விஜயத்துடன் இனிமையாகக் கூப்பிட்டு அவ்விடத்தில் ஒரு வீட்டின்கண் இருக்கும்படி செய்து
அவர்களைப் பார்த்துத் துதித்துக் களங்கமறும்படி தனது மனசின்கண் சேர்ந்த வருகையினது
ஒழுங்குகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
1666.
பிறந்தகுலந்
தனைவழுக்கி நமர்க்குமொரு
பெரும்பகையாய்ப் பேதி யாத
மறந்தவழு
மனத்தினனா யிருந்தமுகம்
மதுவைவுயிர்
மாய்த்தல் வேண்டு
நிறந்தவழுங்
கதிர்வேலீ ரில்லெனிற்றீ
னிலைபெருகி நிலத்தின் மீது
புறந்தயங்கப்
படர்ந்துநமர் குலஞ்சமயந்
தேய்த்தமிழ்த்திப் போடுந் தானே.
8
(இ-ள்)
பிரபையானது தவழா நிற்கும் கிரணங்களைக் கொண்ட வேலாயுதத்தை யுடையவர்களே! தான் அவதரித்த
கோத்திரத்தை இழுக்கும் வண்ணம் பேசி நம்மவர்களுக்கும் ஒரு பெரிய விரோதமாகப் பேதியாத
கொலையானது தவழும் மனசையுடையவனா யிருக்கப் பெற்ற முகம்ம தென்பவனின் ஆவியை மாயும்படி
செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவனது தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது
நிலைமையானது இப்பூமியின் மீது அதிகரித்துப் பக்கங்களில் பிரகாசிக்கும் வண்ணம் பரவி நமது
குலத்தையும் மார்க்கத்தையுங் குறைத்துத் தாழ்த்திப் போடும்.
|