முதற்பாகம்
1667.
பகையினைநல்
லுடல்வருத்து நோயதனைக்
கொடுநெருப்பைப் பாரின் மீதிற்
றொகுவிடத்தைத்
தோற்றரவிற் பரிகரித்த
லியாவருக்குஞ் சூழ்ச்சித் தாகு
மிகுமெனிலிந்
நிலமாக்கண் மதியாலும்
வலியாலும்
வெல்வ தாகா
நிகரரும்வெஞ்
சமர்தொலைத்து நிறங்குருதி
பிறங்கியொளிர் நிணங்கொள் வேலீர்.
9
(இ-ள்)
அன்றியும், ஒப்புச் சொல்லுதற் கருமையான வெவ்விய யுத்தத்தை அழித்து இரத்தத்தினது பிரபையானது
நிறைந்து பிரகாசியா நிற்கும் நிணத்தைக் கொண்ட வேலாயுதத்தை யுடையவர்களே! இப்பூலோகத்தின்
மீது விரோதத்தையும் நல்ல சரீரத்தை வருத்தா நிற்கும் வியாதியையும் கொடிய அக்கினியையும்
நெருங்கிய விடத்தையும் உண்டான பொழுதே நீக்குவது யாவர்களுக்கும் நுண்ணிய அறிவாகும். அவ்விதம்
நீக்காது அவைகள் அதிகப்படுமேயானால் இந்தப் பூமியின் கண்ணுள்ள மனுஷியர்களின் புத்தியினாலும்
வலிமையினாலும் அவற்றை ஜெயிக்க முடியாது.
கலிநிலைத்துறை
1668.
குடிமை யினமர்
குலத்தையு மனத்தினிற் குறித்து
மடிமை யாயிருந்
தேமெனின் முகம்மது தனக்கே
யடிமை யாயவன்
றண்டனைக் கடல்வலி யிழந்து
மிடிமை யாகுதல்
சரதமின் னவிர்கதிர் வேலீர்.
10
(இ-ள்)
அன்றியும், பிரபையானது ஒளிர்கின்ற கிரணங்களைக் கொண்ட வேலாயுதத்தை யுடையவர்களே! குடியினது
இயல்பையுடைய நம்மவர்களின் குலத்தையும் மற்றவைகளையும் மனசின்கண் கருதி நாம் முகம்மதைத்
தண்டிக்காமல் சோம்பேறிகளாக இருப்போமேயானால் அந்த முகம்மதுக்குத் தொண்டர்களாய் அவனது
தண்டனைக்கு நமது வீரத்தை யுடைய வலிமைகளையும் இழக்கப் பெற்று ஏழைகளாவது சத்தியம்.
1669.
உறைந்த
வர்க்கிடர் வருமுன மொருமனத் துணிவாய்
மறந்த
ரித்திடுந் திரளினத் தொடுமுகம் மதுவை
யிறந்தி
டும்படிக் கியற்றுவ மெனினமர்க் கெளிதி
னறந்த ரும்பர
கதியுடன் புகழுமுண் டாமால்.
11
(இ-ள்)
அன்றியும், இந்தத் திருமக்கமா நகரத்தின்கண் தங்கியிருக்கப்பட்டவர்களுக்குத் துன்பமானது
வருவதற்கு முன்னர் நாமனைவர்களும் ஒன்றுபட்ட மனத்தினது தீர்க்கமாய்
|