பக்கம் எண் :

சீறாப்புராணம்

633


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், வலிமையைக் கொண்ட மதிளின் பக்கத்திலுள்ள கோவிலில் தங்கிய நமது தெய்வத்தை எனது மனதின் குறைபாட்டை யொழித்து எங்களின் துன்பங்களை யொழிப்பாயாக வென்று கேட்டால் அத்தெய்வம் நன்மையாகச் சொல்லுமோ? அல்லது நம்மவர்களின் கூட்டத்தினது பாவத்தினால் தின்மையாகச் சொல்லுமோ? என்று நாம் அறிந்திலோம்.

 

1677. ஆய்ந்து ணர்ந்துளத் தெண்ணிய காரிய மனைத்துந்

     தேய்ந்த தல்லது தேறிய தெருட்சிய தன்றே

     வாய்ந்த புந்தியொன் றுளதினந் தெளிந்திடு மதிப்பாய்க்

     காய்ந்த செங்கதிர் வேல்வல னேந்திய கரத்தீர்.

19

      (இ-ள்) அன்றியும், நாம் மனசின்கண் ஆராய்ந்தறிந்து எண்ணிய காரியங்க ளியாவும் தேய்ந்ததே யல்லாமல் தெளிந்த அறிவல்ல, ஆதலால் பிரகாசியா நிற்கும் சிவந்த கிரணங்களைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிய வலக்கரத்தை யுடையவர்களே! இன்னம் பொருந்திய புத்தியான தொன்றுண்டு. அதை மதிப்பாய் நீங்கள் உங்கள் மனசின்கண் அறியுங்கள்.

 

1678. உரனி னம்பெருங் குலத்தினி லரசரி னுயர்ந்தோன்

     மரைம லர்த்தடஞ் சூழ்திமஸ் கதிபதி மாலிக்

     கருள்க பீபெனு மரசனுக் கறிந்திட வுரைத்து

     விரைவி னம்பெரும் பகையினைத் துடைத்திடல் வேண்டும்.

20

      (இ-ள்) வலிமையிலும் நமது பெரிய குலத்திலும் இராஜர்களிலும் மேன்மையை யுடையவனான தாமரைப் புஷ்பங்களைக் கொண்ட தடாகங்கள் வளைந்த திமஸ்கு நகரத்தினது இராஜன் மாலிக் கென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த ஹபீபென்று சொல்லும் மன்னவனுக்குத் தெரியும் வண்ணம் முகம்ம தென்பவனின் செய்திகளைக் கூறிச் சீக்கிரமாக நமது பெரிய விரோதத்தை இல்லாமற் செய்ய வேண்டும்.

 

1679. ஈத லாற்பிறி திலையென அபூசகு லிசைப்ப

     வாத ரத்துடன் கேட்டவ ரனைவரு மகத்திற்

     கோத றத்தெளிந் திம்மொழி நன்கெனக் குறித்து

     மாதி ரப்புயம் வீங்கிட மகிழ்ந்துசம் மதித்தார்.

21

      (இ-ள்) இஃதல்லாமல் வேறேயொரு உபாயமுமில்லையென்று அந்த அபூஜகிலென்பவன் கூற அவ்வார்த்தைகளை அன்போடும் கேட்டவர்களான அக்காபிர்களெல்லாவரும் தங்களின் மனசின்கண் குற்றமறும் வண்ணம் தேறி