முதற்பாகம்
இந்த வார்த்தைகள்
நல்ல வார்த்தைகள் தாமென்று மதித்து மலைகளை நிகர்த்த தங்களின் தோள்கள் பூரிக்கும்படி
சந்தோஷமுற்று அவ்வார்த்தைகளுக்கு உடன்பட்டார்கள்.
1680.
மாந்த ரியாவரு
மொருப்பட வெழுந்தொரு மருங்கிற்
போந்தி
ருந்துநல் லறிவினிற் கேள்வியிற் புகழிற்
சார்ந்த
உத்தரப் பிரத்தியுத் தரத்திவன் றனைப்போ
லாய்ந்த பேரிலை
யெனவொரு வனைக்குறித் தழைத்தார்.
22
(இ-ள்)
அப்போது அங்கு கூடியிருந்த மனுஷியர்களெல்லாவரும் ஒன்றுபட எழும்பி ஒரு பக்கத்தில் போயிருந்து
பொருந்திய நல்ல அறிவினாலும் கேள்வியினாலும் கீர்த்தியினாலும் உத்தரத்தினாலும்
மறுமொழியினாலும் இவனைப் போலத் தேர்ந்த ஜனங்கள் வேறேயொருவரு மில்லரென்று சொல்லி
மனசின்கண் மதித்து ஒரு மனிதனைக் கூப்பிட்டார்கள்.
1681.
பத்தி ரமிவன்
வரைந்திடிற் காரியம் பலிக்கும்
புத்தி
யிற்றிறத் தவனிவ னெனப்பல புகழ்ந்து
முத்தி ரைப்பட
முறையொடுந் தேர்ந்தியா மொழிந்த
வுத்த ரந்தனை
வரைகென யாவரு முரைத்தார்.
23
(இ-ள்)
அவ்விதம் கூப்பிட்டு அங்கு தங்கியிருந்த அனைவர்களும் இவன் கடித மெழுதினால் நமது கருமம்
சித்தி பெறும். அன்றியும், இவன் அறிவினால் உறுதியான அறிவை யுடையவனென்று பலவாக அவனைத்
துதித்து நாங்கள் வரிசையோடும் ஆலோசித்துச் சொல்லும் உத்தரத்தை நீ அடையாளப்படும் வண்ணம்
எழுதுவாயாகவென்று சொன்னார்கள்.
1682.
காசி லாதுரை
வரைபவன் கேட்டுளங் களித்து
மாசி லாப்பெருந்
தலைவரைத் தாழ்ந்துற வாழ்த்திச்
சூசி யுங்கடு
தாசியு மெடுத்துமை தோய்த்துப்
பாசு ரந்தனை
யுரைமின்க ளெனுமுரை பகர்ந்தான்.
24
(இ-ள்)
அவர்கள் அவ்வாறு சொல்லவே அவ் வார்த்தைகளை வாசகங்களைக் குற்றமில்லாது எழுதப்பட்டவனான
அந்த மனிதன் தனது காதுகளினால் கேள்வியுற்று மனமானது சந்தோஷிக்கப் பெற்றுக் களங்கமற்ற
பெருமையை யுடையவர்களாகிய அந்தத் தலைவர்களைப் பணிந்து இசையும்படி துதித்து எழுதுகோலையும்
காகிதத்தையும் கையிலெடுத்து மையை நனைத்துக் கடிதத்தினது வாசகத்தைச் சொல்லுங்களென்று
கேட்டான்.
|