பக்கம் எண் :

சீறாப்புராணம்

637


முதற்பாகம்
 

1690. எனக்கு றுங்கலி மாவுரை தனக்கியை யாதான்

     றனக்கெ ரிந்திடு நரகமென் றிசைத்தவன் றனக்குக்

     கனக்க மேம்படு மவர்கடாங் கனகநன் னாட்டின்

     மனைக்குள் வாழ்குவர் சரதமென் றுரைவழங் குவனால்.

32

      (இ-ள்) அன்றியும், அவன் எனக்குப் பொருந்திய கலிமாவினது வார்த்தைகளுக்கு உடன்படாதவனுக்கு எரியா நிற்கும் நரகலோகமென்று கூறி அவன் கலிமாவுக்கு மேன்மையுடன் உட்படுவோர்கள் மிகவாய் மேன்மை பொருந்திய சுவர்க்கலோகத்தின் வீட்டிற்குள் வாழுவார்கள். இஃது சத்தியமென்று சொல்லுகின்றான்.

 

1691. தேறி லாதகட் டுரையினிற் புதுநெறி திருத்தி

     மாறு பட்டவ ரெவரையுந் தன்வசப் படுத்தி

     வீறு கொண்டநந் தேவத மனைத்தையும் விழலா

     யேறு மாறுகொண் டிரும்புகல் லெனவிகழ்ந் திடுவான்.

33

      (இ-ள்) அன்றியும் தேறாத பொய் வார்த்தைகளினால் நூதனமாகிய ஒரு மார்க்கத்தைச் செவ்வைப்படுத்தி மாறுபட்டவர்களான யாவர்களையும் தனது வசப்படுத்திப் புண்ணியத்தைக் கொண்ட நமது வேதங்களெல்லாவற்றையும் வீணாய்க் குழப்பங் கொண்டு இரும்பென்றும் கல்லென்றும் நிந்திக்கின்றான்.

 

1692. ஆல யங்களைக் காண்டொறுங் கண்புதைத் தகல்வன்

     மேலை யோர்செயும் வணக்கங்க ளனைத்தையும் வெறுப்பன்

     பாலை நேர்மறைக் குருக்களைத் தினம்பழித் திடுவன்

     சால வும்மனப் பெருமையிற் கிளையொடுஞ் சாரான்.

34

      (இ-ள்) அன்றியும், அவன் கோயில்களைப் பார்க்கும் தோறும் தனது கண்களைப் பொத்திக் கொண்டு நீங்கிச் செல்லுகின்றான். பெருமையிற் சிறந்தவரான நம்மவர்கள் செய்யும் வணக்கங்களெல்லாவற்றையும் வெறுக்குகின்றான். பாலை நிகர்த்த களங்கமில்லாத நமது வேதக்குருக்களைப் பிரதிதினமும் நிந்திக்கின்றான். தனது மனச்செருக்கினால் மிகவும் கிளையோடும் இணங்கினான்.

 

1693. அகில மீதுறை யரசர்க ளெவரையு மடிக்கீழ்ப்

     புகவி டுத்துவ னென்பது சரதமாப் புகல்வன்

     பகும னத்தறி வினிற்றெளி வினிற்பல நெறியி

     லிகலி யென்னுட னெதிர்ப்பவ ரிலையென விசைப்பன்.

35

      (இ-ள்) அன்றியும், இந்தப் பூலோகத்தின் கண் தங்கிய இராசர்களியாவரையும் எனது பாதத்தினகம் புகுதும் வண்ணம்