பக்கம் எண் :

சீறாப்புராணம்

639


முதற்பாகம்
 

1697. இனைய பாசுர மனைத்தையும் விரித்தெடுத் திசைத்து

    வனையும் வார்கழ லறபிக ளனைவரும் வகுத்தார்

    தினையி னவ்வள வென்னினுஞ் சிதைவிலா வண்ண

    நினைவி னேர்வழி தொடுத்தெழு தினன்வரி நிரைத்தே.

39

      (இ-ள்) இப்படிப்பட்ட வாசகங்களெல்லாவற்றையும் அலங்கரியா நிற்கும் நேர்மையான பாதங்களையுடைய அந்த அறபிக ளெல்லாவரும் விரிவா யெடுத்து வகைப்படுத்திச் சொன்னார்கள். அப்போது கடித மெழுதுவோனாகிய அவன் தினையை நிகர்த்த அவ்வளவாயினும் குற்றமில்லாதபடி வரிகளை வரிசையாக்கி அவர்களின் எண்ணத்தினது நேர்மையை ஒழுங்காக எழுதினான்.

 

1698. எழுது பத்திரந் தனைமடித் திலங்குபட் டதனான்

    முழுதி னும்பொதிந் திருவயின் முத்திரை பதித்துக்

    குழுவி லாய்ந்தொரு விரைவினன் கரத்தினிற் கொடுப்பத்

    தொழுது வாங்கினன் காலினுங் காலினிற் றொடர்வான்.

40

      (இ-ள்) அவ்வாறு எழுதிய அந்தக் கடிதத்தை மடித்துப் பிரகாசியா நிற்கும் ஒரு பட்டு வஸ்திரத்தினால் அதை முழுவதும் மூடி இரண்டு பக்கங்களிலும் முத்திரையைப் பதியும் வண்ணம் வைத்து அங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தின்கண் ஆராய்ந்து விரைவாய் நடக்கப்பட்ட ஒருவன் கையில் அக்காகிதத்தைக் கொடுக்கக் காற்றைப் பார்க்கிலும் அதிகமாய்க் காலினால் தொடர்ந்து செல்லுகின்ற அவன் அவர்களியாவர்களையும் வணங்கித் தனது கையினால் அதை வாங்கினான்.

 

1699. எடுத்த முத்திரைப் பத்திரஞ் சிரமிசை யேற்றிக்

    கொடுத்த மன்னரைப் பணிந்துகொண் டறபிகள் குழுவை

    விடுத்து வீதிநன் னிமித்தமெய் திடவிரை வுடனே

    தடத்து கிற்கொடி நுடங்கிய மதிட்புறஞ் சார்ந்தான்.

41

      (இ-ள்) அவ்வாறு வாங்கின அந்தக் கடிதத்தைத் தனது தலையின் மீது உயர்த்தி வைத்து அக்கடிதத்தைத் தனது கையில் கொடுத்த அந்த அரசர்களை வணங்கிக் கொண்டு அவ்வறபிகளின் கூட்டத்தை விட்டுத் தெருவின்கண் நல்ல நிமித்தமானது பொருந்தும் வண்ணம் சீக்கிரமாய் வஸ்திரத்தினாலான பெரிய கொடிகள் அசையா நிற்கும் மதிளினது பக்கத்தில் போய்ச் சேர்ந்தான்.

 

1700. கரட மும்மதக் கரிநிகர் துரையபுல் காசீ

    மிரவ லர்க்களித் தவனிரு நிதிபெரு கினபோன்

    மரும லர்த்தட வாவியுங் கழனியும் வழிதேன்

    முருகொ டுங்கனி தரும்பொழி லனைத்துமுன் னினனால்.

42