முதற்பாகம்
1734. அமரர்கோ னினைய மாற்ற
மாதிதன் பருமான் மேற்கொண்
டிமைநொடிப் பொழுதிற் றோன்றி யியம்பிய
திணங்கா ரான
திமிரவெம் பகைக்குத் தோன்றுந் தினகர
னாகப் பூத்த
கமலவொண் வதனச் செவ்வி முகம்மது களிப்புக்
கொண்டார்.
76
(இ-ள்) யாவற்றிற்கும்
முதன்மையனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் உத்திரவை
அமரேசுவரராகிய ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள்
மேற்கொண்டு இப்படிப்பட்ட சமாச்சாரத்தை இமையா
நிற்கும் நொடிப் பொழுதில் ஆகாயத்தின்கண்
பிரசன்னமாய்ச் சொன்னதைச் சத்துராதிகளான
அந்தகாரத்தைக் கொண்ட வெவ்விய விரோதத்திற்கு
உதயமாகும் சூரியனாக மலர்ந்த தாமரை மலரை யொத்த
ஒள்ளிய முகத்தையுடைய அழகிய நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேட்டுச் சந்தோஷம்
கொண்டார்கள்.
1735.என்னுயிர்த்
துணைவ ரான சபுறயீ லிருகண் ணார
முன்னுறு கோலம் போல முகத்தெதிர் நிற்பப்
பேதந்
தன்னைமாற் றுகவென் றாதி தன்னுட னிரந்து
நின்றார்
மன்னிய சபுற யீலு மறுத்துமுன் வடிவம்
போன்றார்.
77
(இ-ள்) அவ்விதஞ் சந்தோஷத்தைக்
கொண்ட நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் யாவற்றிற்கும் முதன்மையனான ஹக்கு சுபுகானகு
வத்த ஆலாவோடும் எனது உயிர் போன்ற துணைவராகிய
ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்களை எனது இரண்டு கண்களும்
பொருந்தும் வண்ணம் முன்னருற்ற கோலத்தைப் போல என்
முகத்தினது எதிராக நிற்கும்படி இப்போதிருக்கின்ற
பேதத்தை மாற்றுவாயாக வென்று சொல்லி இரந்து
நின்றார்கள். அப்போது ஜபுறயீல் அலைகிஸ்ஸலா
மவர்களும் மறுத்தும் முன்னர் பொருந்திய வடிவத்தைப்
போன்றார்கள்.
1736. அவிரொளி சபுற யீல்முன்
வடிவெடுத் தடுத்துப் பேசிப்
புவியினின் றகல்வான் புக்கார் பொருந்தல
ருயிரை மாந்திக்
கவினுறு நெடுவே லேந்துங் கரதல முகம்ம தென்னு
நபியினி திருந்தா ரிப்பா னடந்தவா
றெடுத்துச் சொல்வாம்.
78
(இ-ள்) ஒளிரா நிற்கும் பிரபையை
யுடைய ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் அவ்வாறு முன்னருள்ள
சொருபத்தை எடுத்து நெருங்கிப் பேசிவிட்டுப்
பூமியின்கண் நின்று விசாலமாகிய ஆகாயத்திற் போய்ப்
புகுந்தார்கள். சத்துராதிகளின் ஆவியை யருந்தி யழகானது
மிகுத்த நெடிய வேலாயுதத்தைத்
|