முதற்பாகம்
அழகிய நெடிய
தெருவுக ளெல்லாவற்றிலும் தூதர்களைப் புகுதும்படி அனுப்பி
அறிவினால் தேர்ச்சியுற்ற அரசர்களாகிய அறபிகளைக்
கூப்பிட்டு மேகங்கள் தங்கா நிற்கும் பொன்னினாலான
தனது மாளிகையின் முற்றத்திலிருக்கும்படி செய்து அங்கு
சேர்ந்த அக்கூட்டத்தார்களுக்கு ஹபீபரசன் வந்த
சமாச்சாரங்களை எடுத்துச் சொன்னான்.
1740.நெறிகுலஞ்
சமயஞ் சாயா நிறுத்திட வந்த வேந்தைத்
திறைகொடு பணிந்து வேறோர் திருமனை
யிடத்திற் சேர்த்தி
மறுவறும் படிகுற் றேவல் வகுத்தவை நடத்தப்
போதல்
பொறியென வெவர்க்குஞ் சொன்னான்
பொறியறிந் துரைக்கி லானே.
82
(இ-ள்) அன்றியும், அறிவானதை
யறிந்து உரையாதவனான அந்த அபூஜகி லென்பவன் நமது
ஒழுக்கமும் குலமும் மார்க்கமும் சாயாது நிறுத்தும் வண்ணம்
வந்த ஹபீபரசனைத் திறை கொண்டு தொழுது வேறேயொரு அழகிய
வீட்டின்கண் சேர்த்துக் குற்றமறும் வண்ணம் அவன்
வகுத்துச் சொன்ன குற்றேவல்களை நாமனைவரும் நடத்தும்படி
போவது புத்தியென்று அங்குத் தங்கியிருந்த
யாவர்களுக்கும் சொன்னான்.
1741.மனமதிக்
குறியன் கூறும் வசனங்கேட் டறபி மன்ன
ரனைவரு மிதுநன் கென்ன வகத்தினிற் கொண்டு
வேறோர்
புனைகதிர் விடுதி மாடம் புதியதொன்
றியற்றிச் செம்பொற்
கனைகழ லரசைச் சேர்த்திக் கவல்வது கரும
மென்றார்.
83
(இ-ள்) சுருங்கிய அறிவைக் கொண்ட
மனத்தை யுடையவனான அந்த அபூஜகிலென்பவன் அவ்வாறு
சொல்லும் வார்த்தைகளை அறபி மன்னவர்களான
அவர்களியாவர்களும் தங்களின் காதுகளினால்
கேள்வியுற்று இச்சமாச்சாரமானது நல்லது என்று மனசின்கண்
கொண்டு வேறே யொப்பற்ற நூதனமாகிய அழகிய
கிரணங்களையுடைய விடுதி மாளிகையொன்று செய்து சிவந்த
பொன்னினாலான ஒலியா நிற்கும் வீரக்கழலையுடைய அரசனான
ஹபீபென்பவனை அம்மாளிகையில் சேரச் செய்து நமது
குறைகளைச் சொல்லுவது காரியமென்று சொன்னார்கள்.
1742.மரவினை
யவர்க்குஞ் சிற்ப மறுவறு தொழிலி னோர்க்குந்
திரகம தளித்துச் செவ்விச் செழுமுடிக் கனக
மாட
நிரைநிரை யியற்றிச் சுற்று நெடுமதி
றிருத்தி வாயில்
விரிகதிர்க் கபாடஞ் சேர்த்தி வீதிகள்
பலவுஞ் செய்தார்.
84
(இ-ள்) அவ்விதம் சொன்ன அவர்கள்
மரத்தொழில் செய்யப்பட்டவர்களான கம்மாளர்களுக்கும்
குற்றமற்ற சிற்பத் தொழிலையுடையவர்களான
மண்ணீட்டாளர்களுக்கும் திரகம்
|